WWE ஜாம்பியன்களான ஜான்சீனா, அண்டர்டேக்கர், ரோமன் ரைன் உள்ளிட்ட வீரர்கள் பெறும் சம்பளம் தொடர்பான தகவல்கள் கசிந்துள்ளன.

உலக அளவில் மிகவும் பிரசித்துப் பெற்ற நிகழ்ச்சியாகத் திகழ்கிறது WWE ஜாம்பியன் மல்யுத்த நிகழ்ச்சி.  

WWE wrestling players Salary details

இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு இணையான ரசிகர்களை கொண்ட நிகழ்ச்சியாக இந்த WWE என்னும் வேர்ல்ட் ரெஸ்லிங் ஜாம்பியன் மல்யுத்த நிகழ்ச்சி மாறியிருக்கிறது என்றால், அது மிகையாகாது. இந்தியாவில் மட்டும் இப்போட்டியை சுமார் 34 கோடி மக்கள் காண்பதாக கூறப்படுகிறது.

இந்த போட்டியில், ஹிட்மேன் அண்டர்டேக்கர், ராக், ஜான்சீனா உள்ளிட்ட சூப்பர் ஸ்டார்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு இருக்கிறது. அத்துடன், இப்போட்டியில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிரேட் காளி, ஜிண்டர் மஹால் ஆகியோரும் தடம் பதித்து வருகின்றனர்.

WWE wrestling players Salary details

இதனிடையே, இந்த மல்யுத்த போட்டியில் யார் அதிக வருவாய் ஈட்டும் வீரர் என்ற தகவலும் தற்போது கசிந்துள்ளன.

அதன்படி, 10 மில்லியன் டாலர் வருமானம் பெறும், பிராக் லெஸ்னர் முதலிடம் பிடித்துள்ளார்.

2 வது இடத்தில், ரோமன் ரெயன்ஸ் 5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி வருகிறார்.

3 வது இடத்தில், ரேண்டி ஆர்டன் 4.1 மில்லியன் டாலர் ஈட்டி வருகிறார்.

4 வது இடத்தில், சேத் ரோலின்ஸ் 4 மில்லியன் டாலர்களை வருமானமாகப் பெறுகிறார்.

5 வது இடத்தில், டிரிபிள் எச் 3.3 மில்லியன் டாலரை வருமானமாகப் பெறுவது தெரியவந்துள்ளது.

WWE wrestling players Salary details

அதேபோல், 

6 வது இடத்தில், பெக்கி லிஞ்ச் 3.1 மில்லியன் டாலர் பெறுகிறார்.

7 வது இடத்தில், கோல்ட்பெர்க் 3 மில்லியன் டாலரை வருமானமாகப் பெறுகிறார்.

8 வது இடத்தில், ஷேன் மெக் மோகன் 2.1 மில்லியன் டாலரை வருமானமாகப் பெறுகிறார்.

9 வது இடத்தில், ஸ்டெபானி மெக்மோகன் 2 மில்லியன் டாலரை வருமானமாகப் பெறுகிறார்.

10 வது இடம் பிடித்துள்ள பிராவ்ன் ஸ்ட்ரோமேன் 1.9 மில்லியன் டாலரை ஈட்டி வருகிறார்.

WWE wrestling players Salary details

இந்த மல்யுத்தப்போட்டி, திட்டமிடப்பட்ட நாடகம் என்று கூறப்பட்டாலும், ரசிகர்களிடம் கடந்த 40 ஆண்டுகளாகக் குறையாத வரவேற்பைப் பெற்று, தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.