கள்ளக் காதல் உறவால், பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில், ஆண் ஒருவர் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கும் சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அடுத்து உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் தனியார் தங்கும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் ஆண், பெண் இருவர் கழுத்து அறுக்கப்பட்டு நிலையில் உயிரிழந்த நிலையில் கிடப்பதாக கடையநல்லூர் காவல் துறையினருக்கு, அந்த விடுதியின் ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

இது தொடர்பாக சம்மந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்த காவல் துணைக் கண்காணிப்பாளர் சாமிநாதன் தலைமையிலான போலீசார, ஆண் நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டு இருப்பதைப் பார்த்து உள்ளனர்.

இதனையடுத்து, அவரை உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகக் கொண்டு சென்றனர். அங்கு, அவருக்குத் தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

அத்துடன், அங்கு சடலமாக கிடந்த அந்தப் பெண்ணின் உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்கா அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இந்த சம்பவம் குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், “உயிருடன் மீட்கப்பட்டவர் சிவகிரி அருகே உள்ள மேல கரிசல் குளம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான அந்தோணி வியாகப்பன் என்பது தெரிய வந்தது. 

அதே போல், அங்கு சடலமாக மீட்கப்பட்ட பெண் ராயகிரி பகுதியைச் சேர்ந்த 35 வயதான மாலா என்பதும் தெரிய வந்தது. 

குறிப்பாக, 50 வயதான அந்தோணியும், 35 வயதான மாலாவும் திருமணத்தை மீறிய கள்ளக் காதல் உறவில் இருந்து வந்தது” தெரிய வந்தது.

மேலும், “அவர்கள் இருவரும் திருமணப் பந்தத்தைத் தாண்டிய உறவில் இருந்ததால், தனிமையில் உல்லாசம் அனுபவிக்க அடிக்கடி இந்த விடுதிக்கு வந்து செல்வதும்” போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 50 வயதான அந்தோணி, கண் திறந்து “என்ன நடந்தது?” என்று கூறினால் மட்டுமே, இது தற்கொலையா? அல்லது வேறு எதுவும் காரணமா என்பது தெரிய வரும்” என்றும், கூறப்படுகிறது. ஆனாலும், இரு வீட்டாரிடமும் போலீசார் தொடர்ச்சியாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.