இளம் பெண்ணை மாமனாரும், கணவனின் சகோதரனும் சேர்ந்த கூட்டுப் பலாத்காரம் செய்த கொடூமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் தான், இப்படி ஒரு கொடுமை அரங்கேறி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜல்ராபதானில் உள்ள பால்தா பகுதியைச் சேர்ந்த பிரதான் சிங் என்பவருக்கு, கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

திருமணம் ஆகி சுமார் ஒரு ஆண்டை தாண்டியும், அந்த பிரதான் சிங்கின் மனைவி தாய்மை அடைய வில்லை என்று கூறப்படுகிறது. இது தொடர்பான சண்டை அவர்கள் குடும்பத்தில் எதிரொலித்துள்ளது. இது தொடர்பாகத் தொடர்ந்து சண்டை நடைபெற்று வந்த நிலையில், கொடூரத்தின் உச்சமாக, பிரதான் சிங் தந்தை பரத் சிங்கும், அரவது சகோதர் மகேந்திர சிங்கும், சேர்ந்து பிரதான் சிங்கின் மனைவியைப் பலவந்தமாகக் கூட்டாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர்.

குறிப்பாக, ஒரு முறை அல்ல இரு முறை அல்ல கடந்த ஒரு மாத்தில் மட்டும் அந்த இளம் பெண்ணை மாமனாரும், கணவனின் சகோதரனும் சேர்ந்த, பல முறை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதுள்ளனர். இந்த கூட்டுப் பாலியல் பலாத்காரத்திற்குக் கணவனும் உடைந்த என்ற அதிர்ச்சிகரமான செய்தியும் வெளியாகி உள்ளது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட பிரதான் சிங்கின் மனைவி, அங்குள்ள ஜலாவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், “கடந்த ஒரு மாதத்தில் மட்டும் என்னை 4 முறை கணவரின் தந்தையும், கணவரின் சகோதரரும் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், பாதிக்கப்பட்ட இளம் பெண் குற்றம் சாட்டி உள்ளார். அத்துடன், “ இது குறித்து வெளியே சொன்னால், என்னைக் கொலை செய்து விடுவதாகவும் அவர்கள் மிரட்டி வந்ததாகவும்” அவர் புகார் தெரிவித்தார். 

இதனால், அதிர்ச்சியடைந்த போலீசார், இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த அந்த பெண்ணின் மாமனார், கணவனின் சகோதரர் மற்றும் கணவன் ஆகிய 3 பேரையும் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு மேல் ஆகியும் அந்த பெண் தாய்மை அடைய வில்லை என்றும், எங்கள் குடும்பத்திற்கு வாரிசு வேண்டும் என்பதற்காகவே, இப்படி செய்தோம் என்றும், அவர்கள் வாக்கு மூலம் அளித்ததாகவும்” கூறப்படுகிறது. மேலும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அத்துடன் மாமனாரும் மற்றும் கணவனின் சகோதரனால் கூட்டுப் பலாத்காரத்திற்கு ஆளான பெண்ணை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ராஜஸ்தானில் பெண் ஒருவர் அவரது மாமனாராலும், கணவரின் சகோதரனாலும் சேர்ந்து கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகக் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அதே போல், வேலை செய்யும் நிறுவனத்தில் இளம் பெண் ஒருவர் நிறுவனத்தின் உரிமையாளர் உட்பட 3 பேரால் கடத்தப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் உள்ள புகைப்படம் மற்றும் ஓவியக் கண்காட்சியகத்தில் பணியாற்றி வந்த இளம் பெண் ஒருவர், பணி நிமித்தமாக டெல்லி சென்ற போது, திடீரென கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் காரணமாக, டெல்லியில் இருந்து மீண்டும் புனே திரும்ப முடியா சூழல், அந்த பெண்ணிற்கு ஏற்பட்டது.

இதன் காரணமாக, டெல்லியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் அந்த பெண் டூம் எடுத்துத் தங்கியதுடன், செலவுக்கு பணம் இல்லாத நிலையில், அலுவலகப் பணத்தைச் செலவு செய்துள்ளார். 

இந்நிலையில், போக்குவரத்து சேவை தொடங்கிய நிலையில், கடந்த ஜூன் மாதம் மீண்டும் அந்த பெண், புனே திரும்பி உள்ளார். இதனையடுத்து, “அலுவலகப் பணத்தைத் திருப்பி தரும் படி” அந்த இளம் பெண் பணியாற்றும் நிறுவனத்தின் உரிமையாளர் கேட்டுள்ளார். அதற்கு, அந்த பெண் தான் செலவு செய்த பணத்திற்குக் கணக்கு கூறி இருக்கிறார்.

இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த பெண், தன்னுடைய 2 நண்பர்களுடன் சேர்ந்து, அந்த பெண்ணை அவர்கள் காரில் கடத்திச் சென்று, கண்மூடித் தனமாகத் தாக்கி உள்ளனர்.

மேலும், “என்னுடைய பிறப்பு உறுப்பில் கிருமி நாசினியினை தெளித்து, என்னைத் தொடர்ந்து கடுமையாக அவர்கள் சித்திரவதை செய்தனர்” என்றும், பாதிக்கப்பட்ட பெண் குற்றம் சாட்டி உள்ளார்.

இதனையடுத்து, அந்த 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், பாதிக்கப்பட்ட இளம் பெண்ணை, புனே அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, அந்த பெண்ணிற்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.