பெண்ணை கடத்திய 2 பேர், ஒரு நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

உத்தரப் பிரேதசம் மாநிலத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

உத்தரப் பிரேதசம் மாநிலம் அலிகார் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கணவருடன் வசித்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, தனது கணவருடன் சற்று தொலைவில் உள்ள தெரிந்தவர்களின் விசேச நிகழ்ச்சிக்குக் கணவன் - மனைவியுமாக சென்று உள்ளனர்.

அப்போது, தனது மனைவியை அங்கேயே இருக்கும் படி கூறிவிட்டு பக்கத்தில் சென்று வருவதாகக் கூறிவிட்டுச் சென்ற கணவன், வெகு நேரமாகியும் அங்கு திரும்பி வரவில்லை.

அத்துடன், அந்த நிகழ்வுக்கு வந்த விருந்தினர்கள் அனைவரும் அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்ட நிலையில், அந்த பெண் மட்டும் தனது கணவன் எப்போது வருவார் என்று வெகு நேரமாகக் காத்துக்கொண்டு இருந்தார்.

இதனையடுத்து, நேரம் ஆகிக்கொண்டே போனால், அந்த பெண் விசேசம் நடைபெற்ற இடத்திலிருந்து சற்று அருகில் உள்ள ஒரு பொதுவான இடத்தில் வந்து அந்த பெண் தனியாக நின்றுகொண்டு உள்ளார்.

அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர், அந்த பெண்ணிடம் விசாரித்து உள்ளனர். அதற்கு, அந்த பெண்ணும், “எனது கணவருக்காகக் காத்திருக்கிறேன் என்றும், வெகு நேரமாகியும் அவர் இன்னும் வரவில்லை” என்றும், பதில் அளித்திருக்கிறார்.

இதனை தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அந்த இருவரும், “உங்களை நாங்களே வீடு வரை சென்று விட்டுவிட்டு வருகிறோம்” என்று, கூறி இருக்கிறார்கள்.

வேறு வழியில்லாமல் அவர்களை நம்பிய அந்த பெண்ணும், அவர்களது இருசக்கர வாகனத்தில் ஏறி உள்ளார். அதன் படி, அந்த பெண்ணை தங்களது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு சென்று உள்ளனர்.

அங்குள்ள குறிப்பிட்ட சாலையைக் கடந்த பிறகு, அந்த பெண்ணை கடத்தி சென்ற அவர்கள், ஒரு நாள் முழுவதும் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்து, அந்த பெண்ணை வெறித் தீர மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

இதனையடுத்து, மறுநாள் தான் அந்த பெண்ணை அவர்கள் விடுவித்து உள்ளனர்.

இப்படியான மோசமான நிலையில் வீடு திரும்பிய அந்த பெண், வீட்டில் தனது கணவனிடம் வந்து தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்காரம் குறித்து கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்ட கணவன், மனைவியை அழைத்துக்கொண்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிரமாக விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அந்த பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட 2 பேரையும் அதிரடியாகக் கைது செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண் அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இதனிடையே, தனியாக நின்றுகொண்டிருந்த பெண்ணை கடத்தி 2 பேர் சேர்ந்து, ஒரு நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே, கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.