ரயிலில் தூங்கிய பெண்ணை ரயில்வே ஊழியர்கள் இருவர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில், அதுவும் தலைநகர் சென்னையில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

சென்னை அடுத்து உள்ள செங்கல்பட்டு அருகில் இருக்கும் பரனுரை சேர்ந்த கூலி வேலை செய்யும் 40 வயது பெண் ஒருவர், குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார். இதனால், கையில் பணம் கிடைக்கும் போதெல்லாம் அந்த பெண் குடிப்பது வழக்கம் என்று கூறப்படுகிறது.

அதன் படியே, நேற்றிரவு சென்னை பல்லாவரத்தில் இருந்து, செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் பரனுருக்கு சென்ற அந்த 40 வயதான பெண், மது போதையில் பயணித்து உள்ளார். இதனால், அந்த ரயில் பயணத்தின் போது, அந்த பெண் அந்த ரயிலிலேயே ஆழ்ந்து தூங்கி இருக்கிறார். 

இதனால், அந்த பெண் குறிப்பிட்ட இடத்தில் இறங்காமல் ஆழ்ந்த தூக்கத்திலேயே இருந்திருக்கிறார். சக பயணிகளும் அந்த பெண்ணை பார்த்தும் பார்க்காதது போல் அந்த ரயிலில் பயணப்பட்டு உள்ளனர்.

இப்படியாக, அந்த மின்சார ரயிலானது பரனுரை கடந்து, செங்கல்பட்டு சென்று விட்டு, மீண்டும் கடற்கரைக்கு வந்து உள்ளது. அதன் பின்னர், அந்த ரயில் தாம்பரத்திற்கு வந்தடைந்து உள்ளது. இதனையடுத்து, அந்த ரயில் தாம்பரத்தில் இருந்து பராமரிப்பு பணிக்காகத் தாம்பரம் மின்சார ரயில் பராமரிப்பு நிலையத்தில் சென்று உள்ளது. அந்த ரயிலை இயக்கியவர், அந்த ரயிலை பராமரிப்பு நிலையத்தில் நிறுத்திவிட்டு, வீட்டிற்குச் சென்று விட்டார். 

அதன் தொடர்ச்சியாக, அந்த ரயில்வே பராமரிப்பு நிலையத்தில் இரவு பணிக்கு பலரும் பணிக்கு வந்து உள்ளனர். அதில், முக்கியமாக, அந்த பணிக்கு வந்தவர்களில் தற்காலிக ஊழியர்களான சுரேஷ், அப்துல் அஜிஸ் ஆகிய இருவரும் சேர்ந்து, அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துகொண்டிருந்தனர். 

அப்போது, ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த அந்த பெண் திடீரென்று கண் விழித்து விட்டார். கண் முழித்து பா்த்த அந்த பெண், தனது நிலையைக் கண்டு, கடும் அதிர்ச்சியடைந்து பதறி உள்ளார்.

ஆனால், சற்று லேசாக அதிர்ச்சியடைந்த பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற இருவரும், அந்த பெண்ணை கட்டாயப்படுத்தி மாறி மாறி இருவரும் பாலியல் பலாத்காரம் செய்து உள்ளனர். 

மேலும், “இந்த பாலியல் பலாத்காரம் சம்பவம் குறித்து வெளியே சொன்னால், உன்னை உண்டு இல்லை என்று செய்துவிடுவோம்” என்றும், அவர்கள் மிரட்டிவிட்டு, அந்த பெண்ணை அனுப்பி உள்ளனர்.

இதனால், இன்னும் பயந்துபோன அந்த பெண், அங்கிருந்து நேரமாகத் தாம்பரம் ரயில்வே காவல் துறையிடம் வந்து புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், ரயில்வே ஊழியர்கள் இருவர் மீதும், போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு 
ஏற்பட்டது.