3 வருடங்களாகக் காதலித்து குடும்பம் நடத்திவிட்டு, கழற்றிவிட்ட காதலனின் வீட்டு முன்பாக கல்லூரி மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் வட மதுரை பகுதியைச் சேர்ந்த 24 வயதான விக்ரமன் என்னும் இளைஞர், கரூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

அப்போது, தன்னுடன் படித்து வந்த ரேவதி என்ற மாணவியைக் கடந்த 3 வருடங்களாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பி கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்த நிலையில், காதலிக்கத் தொடங்கிய அடுத்த சில மாதங்களிலேயே அவர்கள் படித்து வந்த கல்லூரியின் அருகில் உள்ள 

நாககோனார் என்ற பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, திருமணம் செய்துகொள்ளாமலேயே இருவரும் ஒன்றாகத் தங்கி குடும்பம் நடத்தி வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, அவர்களுக்குள்ளான நெருக்கம் மேலும் அதிகரித்த நிலையில், காதலியின் ரேவதியின் வற்புறுத்தலுக்கு இணங்க, கடந்த 12 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொள்வதாகக் காதலன் விக்ரமன் வாக்குறுதி அளித்துள்ளார்.

அதன் பிறகு, திருமண ஏற்பாடுகள் குறித்துப் பேச முயன்று, விக்ரமனை தொடர்புகொள்ள முயன்றபோது, அவர் மாயமானர். இதனையடுத்து, காதலனின் நண்பர்கள் அனைவருக்கும் ரேவதி தொடர்பு கொண்டு பேசி உள்ளார். ஆனால், யாரும் தெரியாது என்ற பதிலையே கூறி உள்ளனர்.

இதனையடுத்து, காதலன் விக்ரமனின் வீட்டை எப்படியோ கண்டுப்பிடித்துவிட்டு, அங்குத் தேடி வந்துள்ளார். அங்கு காதலன் விக்ரமன் இல்லாத நியைில், 

அவரின் பெற்றோரிடம் தங்கள் காதல் விசயம் குறித்துப் பேசி உள்ளார். அதற்கு, விக்ரமனின் பெற்றோர் கோபப்பட்டு, ரேவதியை ஏற்றுக்கொள்ள வில்லை என்று தெரிகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த ரேவதி, தன் காதலன் வீட்டின் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து, ஊரில் உள்ள அக்கம் பக்கத்தினர், அந்த பெண்ணை சமாதானம் பேச முயன்றுள்ளனர். ஆனால், அந்த பெண் யாருக்கும் பிடிகொடுத்துப் பேசவில்லை.

இதனையடுத்து, போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், வேடசந்தூர் காவல் துறையினர் விரைந்து வந்து, ரேவதியை கலைந்துபோகும் படி அறிவுறுத்தினார். அவர் கலைந்து போக மறுத்ததால், அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், “கடந்த 3 ஆண்டுகளாக நாங்கள் காதலித்து வந்தோம். இது குறித்து, எங்கள் வீட்டில் தெரிய வந்ததால், என் பெற்றோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனையடுத்து, காதலிக்கத் தொடங்கிய அடுத்த சில மாதங்களிலேயே விக்ரமனின் மாமா, அக்கா ஆகியோர், எங்களை அழைத்துச் சென்று நாகக்கோனார் என்னும் பகுதியில் தனியாக வீடு எடுத்துத் தங்க வைத்தனர்.

அந்த வீட்டிற்கு வாரம் ஒரு முறை வரும் விக்ரமன், வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கித் தந்த விட்டுச் செல்வார். நாங்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக ஒரே வீட்டில் ஒன்றாக குடும்பம் நடத்தி வந்தோம்.

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி விரைவில் திருமணம் செய்துகொள்வதாக வீட்டிற்குச் சென்ற காதலன் விக்ரமனை, அதன் பிறகு அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், அவரை அவரது பெற்றோர் எங்கேயோ மறைத்து வைத்துவிட்டனர். இது தொடர்பாக அவரின் மாமா மற்றும் அக்காவைத் தொடர்பு கொண்டாலும் எந்த பதிலும் இல்லை. அதனால், என் காதலை கடுப்படித்து அவருடன் என்னைச் சேர்த்து வையுங்கள்” என்று ரேவதி கூறி உள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, 3 ஆண்டுகளாகக் காதலித்து குடும்பம் நடத்திவிட்டுக் கழற்றி விட்ட காதலன் வீட்டின் முன்பு, கல்லூரி மாணவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.