மருமகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த மாமனாரை, மருமகள் எலி மருந்து கொடுத்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் கீழத்துவால் பகுதியில் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கீழத்துவால் பகுதியைச் சேர்ந்த வினோப ராஜன் என்ற இளைஞன், அந்த பகுதியைச் சேர்ந்த கனிமொழி என்ற இளம் பெண்ணை, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் ஆகி 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், இவர்களுக்கு இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. இது தொடர்பாக, கணவன் - மனைவி இருவரும் அங்குள்ள மருத்துவமனைக்குச் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில் வினோப ராஜனின் மனைவி கனிமொழிக்கு 25 வயது ஆகும் நிலையில், வினோப ராஜனின் தந்தை முருகேசன் என்பவர், தனது மருமகளான 25 வயதான கனிமொழி மீது சபலப்பட்டு இருக்கிறார்.

இதனால், கனிமொழி வீட்டில் தனியாக இருக்கும் போது, அவரிடம் பல முறை பாலியல் அத்து மீறிலில் ஈடுபட்டு இருக்கிறார்.

அத்துடன், சபலத்தின் உச்சமாக, தனது மருமகளை தன்னோடு உல்லாசமாக இருக்க அழைத்திருக்கிறார். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த கனிமொழி, இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவருடைய மாமனார் தொடர்ந்து உல்லாசத்திற்கு வற்புறுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. 

இப்படியாக, தனது மாமனாரின் பாலியல் தொல்லை நாளுக்கு நாள் அதிகமாகவே கடும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்த மருமகள் கனிமொழி, தன்னுடைய மாமனாரை கொலை செய்ய முடிவு செய்தார். 

இது தொடர்பாக புதிய திட்டம் போட்ட கனிமொழி, திட்டப்படி கடந்த ஜூலை மாதம் 31 ஆம் தேதி அன்று, மாமனார் முருகேசனுக்கு எலி மருந்தைச் சாப்பாட்டில் கலந்து கொடுத்திருக்கிறார். 

இப்படி, விஷம் கலந்த உணவைச் சாப்பிட்ட முருகேசனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு உள்ளது. இதனால், வலியால் துடித்த அவர் அருகில் உள்ள  மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 

அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி கடந்த ஒன்றாம் தேதி பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்ட நிலையில், “மருகளே, தனது சொந்த மாமனாரை எலி மருந்து கொடுத்து கொன்றது” தெரிய வந்தது.

இதனையடுத்து, மருமகள் கனிமொழியை கைது செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.