மயிலாடுதுறை அருகே மாமனார் வீட்டில் தங்கியிருந்தபோது மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய அக்காவின் கணவனை போலீசார் அதிரடியாகக் கைது செய்து உள்ளனர். 

மயிலாடுதுறை அடுத்து உள்ள சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். 

மனைவியுடன் தன் வீட்டில் குடியிருந்த வந்த அவர், கொரோனா வைரஸ் பரவல் காரணமாகப் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கின் போது, அவர் தன் மனைவி உடன் மாமனார் வீட்டிற்கு வந்து உள்ளார்.

ஊரடங்கு காரணமாக, அவர் தன் மாமனார் வீட்டில் சில மாதங்கள் அப்படியே தங்கி உள்ளார். அப்போது, மாமனார் வீட்டில் அனைவரும் வெளியில் சென்றிருந்த போது, கொழுந்தியா உறவுமுறையான 17 வயதான சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்து உள்ளார். அப்போது, சிறுமி மீது சபலப்பட்ட அந்த சிறுமியின் அக்கா கணவன், அந்த சிறுமியிடம் ஆசையாகப் பேசியும், பின்பு மிரட்டியும் பலவந்தமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

இப்படியாக, மாமனார் வீட்டில் தங்கி இருந்த அந்த சில மாதங்கள் முழுவதும் அந்த 17 வயதான சிறுமியை மிரட்டியே பலவந்தமாகத் தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்து வந்து உள்ளார். 

இந்நிலையில், அந்த 17 வயதான சிறுமியின் உடலில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து உள்ளன. இது, சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்து உள்ளது.

அதே நேரத்தில், சிறுமியின் உடல் நிலையும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து, அந்த சிறுமியை அவசர அவசரமாக அவரது பெற்றோர், அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், “அந்த சிறுமி 5 மாதம் கர்ப்பமாக உள்ளதாக” கூறி உள்ளனர்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் உறவினர்கள், அந்த சிறுமியிடம் பக்குவமாகப் பேசிய அவரது பெற்றோர், என்ன நடந்தது என்று நைசாக பேசி முழு விபரங்களையும் கேட்டு உள்ளனர். சிறுமியும், அழுது கொண்டே, அக்கா கணவர் தன்னை பலவந்தமாகப் பல மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்ததையும் கூறி அழுது இருக்கிறார்.

மேலும், மருத்துவமனை நிர்வாகம் சார்பில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இது தொடர்பாக மருத்துவமனைக்கு விரைந்து வந்த அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் கோப்பெருந்தேவி தலைமையிலான போலீசார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுமியிடம் புகார் மனுவைப் பெற்று, விசாரணை மேற்கொண்டனர்.

அத்துடன், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்த சிறுமியின் அக்கா கணவரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணைக்குப் பிறகு, நீதிமன்றத்தில் அவரை ஆஜர் படுத்தி அந்த நபரை சிறையில் அடைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சென்னை கொருக்குப்பேட்டை பி.கே கார்டன் பகுதியில் நள்ளிரவு நேரத்தில் பெண்ணிடம் தகராறில் ஈடுபட்ட இரண்டு பேரை, போலீசார் சினிமா பாணியில் துரத்திப் பிடித்து கைது செய்தனர். இதனால், நள்ளிரவு நேரத்தில் கொருக்குப்பேட்டை பி.கே கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.