சிகிச்சைக்கு வந்த 30 வயது பெண்ணுக்கு வினோத நோய் இருந்ததும், அவர் பெண் அல்ல, ஆண் என்பதையும் மருத்துவர்கள் உறுதிப்படுத்தி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் தான் இப்படி ஒரு வினோ நோய் இருப்பது கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து, அவரது சக குடும்ப உறுப்பினர்கள் சிலருக்கும் இந்த நோய் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கு வங்க மாநிலம் பிர்பம் நகரை சேர்ந்த திருமணம் ஆன 30 வயது பெண்ணுக்குக் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்களுக்குள் தாம்பத்திய வாழ்க்கை சரியாக சென்றுகொண்டிருந்தது. ஆனால், அந்த தம்பதிக்குக் குழந்தை பாக்கியம் இல்லை. இது தொடர்பாக அவர்கள் மருத்துவம் பார்த்தும் பலன் அளிக்காமல், இப்படியே வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில், அந்த 30 வயது பெண்ணிற்கு திடீரென்று வயிற்று வலி ஏற்பட்டு அவதிப்பட்டு வந்துள்ளார். இதனையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் செய்ததில், அவருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து, அந்த பெண்மணியை கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் புற்று நோய் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, புற்று நோய் மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபம் தத்தாவும், புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர் டாக்டர் சமன்தாசும், அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

அப்போது, அது பெண் இல்லை. அவர் ஆண் என்பது தெரியவந்தது. இதனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் மட்டுமில்லாது, அந்த பெண்ணும் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார்.

அந்த பரிசோதனையில், அவருக்கு பெண்ணுக்கு உரிய உடல் உறுப்புகள் இருந்தது உறுதி செய்யப்பட்டாலும், அவரது குரலும் பெண் குரல் தான் என்பதையும் மருத்துவர்கள் உறுதி செய்தனர். ஆனால், அவருக்கு பிறப்பிலேயே கருப்பையும், சினைப் பைகளும் இல்லை என்பதையும் மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அத்துடன், அந்த பெண்ணுக்கு இதுவரை மாத விலக்கும் வந்தது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால், அந்த பெண்ணின் பூர்விகம் மற்றும் வாழ்வியல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சேகரிக்கப்பட்டன.

இவற்றை எல்லாம் ஆய்வு செய்த மருத்துவர் அனுபம் தத்தா, “இந்த பெண்ணிற்கு நேர்ந்திருப்பது ஒரு அபூர்வமான நிலை” என்று கூறியுள்ளனர்.

“இது போன்ற ஒரு நிலையானது, சுமார் 22 ஆயிரம் பேரில் ஒருவருக்கு தான் ஏற்படும் என்றும், அந்த நிலை இவருக்கு ஏற்பட்டுள்ளது” என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, “இவருக்கு ஆண்களுக்கு உரிய 'எக்ஸ் ஒய் குரோமசோம்' தான் உள்ளது என்றும், பெண்களுக்குரிய 'எக்ஸ்எக்ஸ் குரோமசோம்' இல்லை என்றும், மருத்துவ பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக, அவர் தெரிவித்தார்.

மேலும், “அடிவயிற்றில் வலி என்று அவர் சொன்ன உடன் தேவையான பரிசோதனைகளைச் செய்த போது, ஆண்களுக்கு அமைந்திருக்கக்கூடிய விதைப் பைகள் அவருக்கு உடலுக்குள் அமைந்திருப்பதையும் மருத்துவர்கள் கண்டுப்பிடித்துள்ளனதாகவும்” அவர் கூறினார். 

“இது தொடர்பாக அவருக்கு பயாப்சி பரிசோதனை செய்தோம் என்றும், அதில் அவருக்கு விதைப்பை புற்றுநோய் இருப்பதைக் கண்டு பிடித்தோம்” என்றும், அந்த மருத்துவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, “அவருக்கு ஹீமோ தெரபி சிகிச்சை அளிப்பதாகவும், அவரது உடல் நிலை நல்ல நிலையில் உள்ளதாகவும்” மருத்துவர்கள் தற்போது தெரிவித்துள்ளனர். 

முக்கியமாக, “அந்த பெண்ணின் உடலுக்குள் விதைப்பைகள் அமைந்திருந்தாலும், அவை உரிய வளர்ச்சியைப் பெறவில்லை என்றும், டெஸ்டோஸ்டீரான் ஹார்மோனும் சுரக்க வில்லை” என்றும், மருத்துவர்கள் கூறி உள்ளனர். 

மேலும், “அவருக்கு சுரந்துள்ள பெண் ஹார்மோன் காரணமாக, அவர் பெண்ணைப் போன்ற தோற்றத்தைப் பெற்றுள்ளார் என்றும், அதன் காரணமாகவே அவர்  பெண்ணாகவே வளர்ந்திருக்கிறார்” என்றும் மருத்துவர்கள் சுட்டிக்காட்டினார். 

“கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு அவர் திருமணம் செய்து போது அவருக்கும், அவரது கணவருக்கும் இதுபற்றி எதுவுமே தெரியவல்ல என்றும் குறிப்பிட்ட மருத்துவர்கள்,  இது தொடர்பாக நாங்கள் இருவருக்கும் நல்ல ஆலோசனை வழங்கி உள்ளதாகவும் தெரிவித்தார்.

அதே நேரத்தில், “அவர்கள் இருவரும் தங்கள் வாழ்க்கையை, எப்போதும் போல் இப்படியே இணைந்தே தொடரலாம்” என்றும், அது தொடர்பாகவும் இருவருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும்” மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், “இந்த மரபணு பிரச்சனையானது, இவரது 28 வயது சகோதரிக்கும் நடத்தியதாகவும், அதில் அவரும் இந்தப் பெண்ணைப் போலவே.. பெண் தோற்றத்தில் ஆணாகவே இருக்கிறார்” என்பதையும் மருத்துவர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். 

குறிப்பாக, “இந்த பெண்ணின் தாய் வழி சித்திமார் 2 பேருக்கும், கடந்த காலத்தில் இதே பிரச்சினை இருப்பது கண்டறியப்பட்டு உள்ளதாகவும்” மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.