கள்ளக் காதலன் வேறொரு பெண்ணுடன் காதலில் இருந்து வந்ததால், தங்கையின் கணவருடன் கள்ளக் காதலில் இருந்து வந்த அக்கா, வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காஞ்சிபுரம் மாவட்டம் வரதராஜபுரத்தைச் சேர்ந்த பொன்னுரங்கம் என்பவர், அந்த பகுதியில் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர், தன்னுடைய மனைவி செண்பகவல்லி உடன் வசித்து வருகிறார். இந்த தம்பதிக்கு 2 மகள், ஒரு மகன் உள்ளனர்.

ஆனால், செண்பகவல்லியின் தங்கை லாவண்யாவிற்கும், ஜோசப் என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பிறந்த நிலையில், அடுத்த ஆண்டே லாவண்யா 2 வது பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 

ஆனால், 2 வது பிரசவனத்தின் போது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த லாவண்யா எதிர்பாராத விதமாக திடீரென்று இறந்து போனார். 

இதையடுத்து, மனைவி லாவண்யாவை இழந்த கணவன் ஜோசப், தனது ஒரு குழந்தைகளுடன் தன்னுடைய மனைவியின் அக்காவான செண்பகவல்லியின் வீட்டு மாடியில் தங்கி இருந்தார். 

அப்போது, ஜோசப்பிற்கும் - செண்பகவல்லிற்கும் இடையே கள்ளக் காதல் மலர்ந்து உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். 

இவர்களது கள்ளக் காதல் உறவு பல நாட்களாக சென்றுக்கொண்டிருந்த நிலையில், ஜோசப்பிற்கு அந்த பகுதியைச் சேர்ந்த அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு 
வருட காலமாகப் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து தங்களது அன்பை மேலும் வளர்த்து வந்தனர்.

இந்த விசயம், தனது கள்ளக் காதலியான செண்பகவல்லிக்கு தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியான செண்பகவல்லி, காதலன் ஜோசப் உடன் சண்டைபோட்டு உள்ளார். இதனால், அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான செண்பகவல்லி, நேற்றைய தினம் வீடியோ ஒன்றை பதிவு செய்து, தனது கணவன் பொன்னுரங்கத்திற்கு அனுப்பி உள்ளார்.

அந்த வீடியோவில், “தனது தங்கை லாவண்யா இறந்த பிறகு, அவரது கணவன் ஜோசப்புடன் ஏற்பட்ட பழக்கம் பற்றி விளக்கமாகக் கூறி, அவர் தற்போது தனக்குத் துரோகம் செய்துவிட்டதையும் சொல்லி” அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பொன்னுரங்கம், இந்த வீடியோ ஆதாரத்தை எடுத்துக்கொண்டு, சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், செண்பகவள்ளியின் வீடியோ பதிவை ஆய்வு செய்தனர். அந்த வீடியோவில், “எனது தற்கொலைக்கு ஜோசப் தான் காரணம் என்றும், என்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாகவும், தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும், இதன் காரணமாகவே நான் தற்கொலை செய்துகொள்கிறேன்” என்றும், அவர் கூறியிருக்கிறார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.