பெண் மீது ஆசிட் வீசி, உயிருடன் இருக்கும் போதே பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக் கொன்ற சம்பம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பீட் மாவட்டம் நெக்நூர் பகுதியில் கடந்த 13 ஆம் தேதி, அந்த பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் சாலையில் சென்றுகொண்டு இருந்தார். 

அப்போது, அங்க ஆட்கள் நடமாட்டம் மிகவும் குறைவாகக் காணப்பட்ட நிலையில், அந்த பெண்ணை பின் தொடர்ந்து வந்த நபர் ஒருவர், அந்த இளம் பெண் மீது, தான் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை வீசி உள்ளார். இதில், ஆசிட் பட்ட வேகத்தில், அந்த பெண் வலியால் துடித்துக் கதறிக்கொண்டிருந்த நிலையில், துளியும் இறக்கம் இல்லாத அந்த நபர், தான் கையுடன் கொண்டு வந்த பெட்ரோலை, உயிரோடு இருக்கும் அந்த பெண்ணின் மீது ஊற்றி, தீ வைத்து எரித்து உள்ளார்.

இதில், அந்த பெண் மீது தீ மளமளவெனப் பற்றி எரிந்த நிலையில், அந்த பெண் வலி தாங்காமல் இங்கும் அங்குத்தாக ஓடி, அப்படியே சாலையில் உருண்டு பிரண்டார். இதனையடுத்து, அந்த நபர் அங்கிருந்து ஓடிவிட்டார். அப்போது, அந்த வழியாகச் சென்றவர்கள், அந்த பெண்ணை மீட்டு, அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இளம் பெண் ஒருவர் ஆசிட் காயங்களுடனும், பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து, மருத்துவர்கள் அந்த பெண்ணுக்குத் தீவிரமாகக் கிச்சை அளித்தனர். அத்துடன், இது தொடர்பாக, அந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கும் மருத்துவமனை தரப்பில் இருந்து தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.

இது குறித்து விரைந்து வந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வழக்குப் பதிவு செய்தனர். அதன் பின்னர், இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது, தன் மீத ஒருவர் ஆசிட் வீசி தாக்கப்பட்டதுடன், உயிருடன் இருக்கும் போதே பெட்ரோல் ஊற்றி எரித்ததாகவும், பாதிக்கப்பட்ட பெண் கூறியதாகக் கூறப்படுகிறது.

அதன் தொடர்ச்சியாக, சிகிச்சை பெற்று வந்த பெண் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம், மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் காட்டுத் தீ போல் பரவியது.

இதனையடுத்து, “இந்த விவகாரத்தில் போலீசார் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்” என்று, மகாராஷ்டிர உள்துறை அமைச்சர் அனிஸ் தேஷ்முக் அறிவுறுத்தினார்.

அத்துடன், “இந்த வழக்கு விசாரணையை விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றவும், குற்றவாளி விரைந்து கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவர் உத்தரவிட்டார். 

அதன் தொடர்ச்சியாக, குற்றவாளி மேல் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, இந்த வழக்கில் தனிப்படை அமைக்கப்பட்டது. 

இதையடுத்து, போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது குற்றவாளி அதிரடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட குற்றவாளியிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முழுமையான விசாரணைக்குப் பிறகு, அந்த நபர் “ஏன் அந்த இளம் பெண் மீது ஆசிட் வீசி, உயிருடன் இருக்கும் போதே பெட்ரோல் ஊற்றி எரிந்து கொன்றார்?” என்பது தெரிய வரும். 

மேலும், குற்றவாளிக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்” எனவும், உள்துறை அமைச்சர் அனிஸ் தேஷ்முக் உள்ளிட்ட அந்த மாநிலத்தைச் சேர்ந்த பலரும் வலியுறுத்தி உள்ளனர். இச்சம்பவம், அந்த மாநிலத்தில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.