3 வதாக ஒருவரோடு வெறும் 4 நாட்களே பழக்கம் ஏற்பட்ட நிலையில், 3 குழந்தைகளின் தாயார், தனது 2 வது கணவனை போட்டுத்தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கோவை மாவட்டம் நெகமம் பகுதியைச் சேர்ந்த சேர்ந்த நாகராஜன் என்பவர் வசித்து வந்தார். இவரது முதல் மனைவி இறந்துவிட்டதால், கடந்த 8 மாதங்களுக்கு முன்பு அமுதா என்ற பெண்ணை, நாகராஜன் 2 தாக திருமணம் செய்து கொண்டார். 

2 வது திருமணத்திற்கு பிறகு, நாகராஜன் - அமுதா தம்பதியினர் இருவரும், மதுக்கரையில் இருக்கும் அமுதாவின் இல்லத்திலேயே வசித்து வந்தனர். அமுதாவிற்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். அந்த குழந்தைகயும், நாகராஜன் ஏற்றுக்கொண்டே, அமுதாவை, அவர் 2 வதாக திருமணம் செய்துகொண்டார். 

இப்படியான நிலையில், அங்குள்ள சீரப்பாளையத்தில் இருந்த கோலப்பொடி தயாரிப்பு நிறுவனத்தில் தங்கி, கணவன் - மனைவி இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் தான், அங்குள்ள கோலப்பொடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த தூத்துக்குடி மாவட்டம் ஒட்ட பிடாரத்தைச் சேர்ந்த சங்கர் என்பவருக்கும், 3 குழந்தைகளின் தாயார் அமுதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. 

அப்படி, அவர்கள் இருவருக்குமான பழக்கம், வெறும் 4 நாட்களே ஆன நிலையில், மனைவி அமுதா கணவருக்கு தெரியாமல், புதிய நண்பர் சங்கருடன் பேசி வந்து உள்ளனர். 

இந்த சூழலில், கணவன் நாகராஜன் வேலை விசயமாக வெளியில் சென்றிருந்த நிலையில், நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்து உள்ளார். அப்போது, 4 நாட்களுக்கு முன்பு புதிதாக பழக்கம் ஏற்பட்ட சங்கரும் - அமுதாவும் தனிமையில் உல்லாசம் அனுபவித்துக்கொண்டு இருந்து உள்ளனர். அப்போது, இந்த காட்சியை கணவன் நாகராஜன் நேரில் பார்த்து கடும் அதிர்ச்சியாகி உள்ளார். 

இதனையடுத்து, மனைவியுடன் உல்லாசம் அனுபவித்துக்கொண்டிருந்த சங்கருடன் நாகராஜன் சண்டைக்கு சென்று உள்ளார். இதில், அவர்கள் இருவருக்கும் இடையில் சண்டை முற்றிய நிலையில், கடும் ஆத்திரமடைந்த சங்கர், அங்கு கிடந்த சுத்தியலால் நாகராஜனை தாக்கி உள்ளார். இதில், பலத்த காயம் அடைந்த நாகராஜன், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். 

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், விரைந்து வந்த போலீசார், நாகராஜன் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கள்ளக் காதலன் சங்கர், அமுதா ஆகிய இருவரையும் மதுக்கரை போலீசார் கைது செய்து, தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.