சென்னையில் கணவனுக்குத் தெரியாமல் வீட்டிலேயே மனைவி பாலியல் தொழில் செய்து வந்ததை அறிந்த கணவன் கடும் அதிர்ச்சியடைந்தார்.

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லுர் பகுதியைச் சேர்ந்த குமார், லாரி ஓட்டுநராக வேலை பார்த்து வருகிறார். 

லாரி ஓட்டுநராக வேலைப் பார்த்து வருவதால், எப்போதும் வெளியூர்களுக்குச் சென்று விட்டு சில நாட்கள் கடந்த நிலையில் ஊர் திரும்பும் குமார், தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக, தன் மனைவி பிள்ளைகளுடன் வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அப்போது, கடந்த 5 ஆம் தேதி இரவு அவர் வீட்டில் குடும்பத்துடன் தூங்கிக்கொண்டிருந்த நிலையில், இருசக்கர வானத்தில் அவரது வீட்டிற்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் ஒன்ற, கத்தி முனையில் குமாரை மிரட்டி அவர்களுடைய நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த குமார், தன் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், கொள்ளை சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், 5 இருசக்கர வாகனத்தில் 10 பேர் வந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. 

குறிப்பாக, அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஒவ்வொன்றாக ஆய்வு செய்ததில், அந்த இருசக்கர வானங்கள் செங்குன்றத்தில் இருந்து புறப்பட்டு வந்தது தெரிய வந்தது. அத்துடன், அந்த இருசக்கர வாகனங்கள் தண்டையார்பேட்டை வரை சென்றதும் கண்டுபிடிக்கப்பட்டது.

விசாரணையில், கொள்ளையில் ஈடுபட்டது வியாசர்பாடியைச் சேர்ந்த 32 வயதான ரகு தலைமையிலான கும்பல் என்பதையும் போலீசார் அதிரடியாக கண்டுபிடித்தனர்.

அத்துடன், ரகு மற்றும் அவர் கும்பலைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய செல்போன் எண்களை வைத்து, சிக்னல் மூலம் அவர்கள் தலைமறைவாகப் பதுங்கி இருந்த இடத்தையும் போலீசார் கண்டுபிடித்துச் சுற்றி வளைத்தனர். அப்போது, ரகு அவரது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். எனினும், அவர்களைத் துரத்திப் பிடித்த போலீசார், அந்த கும்பலை அதிரடியாகக் கைது செய்தனர். 

கைதானவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், “குமார் வீட்டில் நகை இருப்பது எப்படித் தெரியும்? லாரி ஓட்டுநர் குமார் வீட்டை தேர்ந்தெடுத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஏன்? என்று பல்வேறு கேள்விகளை போலீசார் முன் வைத்தனர். 

அப்போது அவர்கள் கூறிய பதில் தான், போலீசாரை மட்டும் இல்லாமல், புகார் கொடுத்த குமாரையும் திடுக்கிட வைத்தது.

அதாவது, “குமாரின் 2 வது மனைவி, கணவருக்குத் தெரியாமல் தன் வீட்டில் வைத்தே யாருக்கும் தெரியாமல் மிகவும் ரகசியமாக பாலியல் தொழில் செய்து வந்துள்ளார். லாரி ஓட்டுநரான குமார், வெளியூர் செல்லும் நேரத்தில் எல்லாம் வாடிக்கையாளர்களை வீட்டுக்கு வர வைத்து, வீட்டின் மாடியில் உள்ள கூரை வீட்டில் அவர் பாலியல் தொழில் செய்து வந்துள்ளார்.

இதற்காக சில பெண்களை உறவினர்கள் போல் வீட்டுக்கு வர வைத்து, அக்கம் பக்கத்தினருக்குத் தெரியாமல் ரகசியமாக இந்த பாலியல் தொழில் செய்து வந்திருக்கிறார். அப்படி, குமாரின் மனைவியின் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றவர் தான் கொள்ளையில் ஈடுபட்ட ரகு. அப்படி, உடல் சுகத்திற்காக குமார் வீட்டிற்குச் சென்று வந்த போது, குமாரின் மனைவி அதிக அளவிலான பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்பது, ரகுவிற்கு தெரிய வந்தது.

இதனால் அந்த பணத்தையும், தங்க நகைகளையும் கொள்ளையடிக்க ரகு திட்டமிட்டுள்ளார். அதற்காக. தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கடந்த 5 ஆம் தேதி குமார் வீட்டிற்குள் நுழைத்து கத்தி முனையில், தங்க நகைகள் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றதும்”  தெரிய வந்தது.

மேலும், “குமாரின் மனைவி சட்ட விரோதமாக பாலியல் தொழிலில் ஈடுபடுவதால், அவர் போலீசில் புகார் அளிக்க மாட்டார் என்று நினைத்ததாகவும், ஆனால், மனைவி பற்றி எந்த தகவலும் தெரியாத கணவர் குமார், போலீசில் புகார் அளித்ததால் நாங்கள் மாட்டிக்கொண்டோம்” என்றும், பாதிக்கப்பட்ட ரகு வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, குமார் வீட்டில் கொள்ளையடித்த ஏழரை சவரன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு, 3 செல்போன்கள், கொள்ளைக்குப் பயன்படுத்திய கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள், இருசக்கர வாகனங்களை போலீசார் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அனைவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.