“நீயும் கொஞ்சமாட்ட.. அடுத்தவனையும் கொஞ்ச விடமாட்டியா?” என்று கேட்டுக்கொண்டே, கள்ளக் காதலனுடன் சேர்ந்து மனைவியே கணவனை கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் அதுவும் கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே தான் இப்படி ஒரு கொடூர சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகே உள்ள குட்டூரை சேர்ந்த 45 வயதான மாரப்பன் என்பவர், தனது மனைவி 35 வயதான குண்டம்மாளுடன் வசித்து வந்தார். 

இந்த சூழலில் தான் மாரப்பன் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி, தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதை மாரப்பன் வழக்கமாக கொண்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

இதனால், குடித்துவிட்டு வீட்டிறகு வரும் அவர் மனைவியை கண்டுக்கொள்ளாமல் தினமும் தூங்கி விடுவார் என்றும் கூறப்படுகிறது. 

இதனால், அவரது மனைவி 35 வயதான குண்டம்மாள், அதே பகுதியில் வசிதது வரும் சிவசங்கர் என்ற இளைஞருடன் பழக்கமாக, அவருடன் கள்ளக் காதல் ஏற்பட்டு உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர்.

இதன் பிறகு அந்த குடிகார கணவனுக்கு தெரியாமலும், அவர் தூங்கிய பிறகும் கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது.

நாளடைவில் மனைவியின் கள்ளக் காதல் விசயம், கணவனுக்கு தெரிய வந்ததால் கடும் அதிர்ச்சியடைந்த அவர், தனது மனைவியை கண்டித்து உள்ளார். 

அத்துடன், “நீ உன் கள்ளக் காதலை கை விடுமாறு” தொடர்ந்து பல முறை தனது மனைவியை கண்டித்து வந்திருக்கிறார்.

இதனால், கடும் கோபம் அடைந்த அவரது மனைவி, “கணவன் உயிரோடு இருந்தால் தங்களின் உல்லாச வாழ்க்கை பாழாகி விடும்”  என்று, யோசித்து மறுகனமே தனது கணவனை கொல்லவும் அவர் முடிவு செய்திருக்கிறார்.

இது குறித்து, தனது கள்ளக் காதலனிடமும் அவர் ஆலோசனை கேட்டிருக்கிறார். அதன் படி, கடந்த வாரம் 17 ஆம் தேதி இரவு தன்னுடைய கணவனை ஒரு கட்டையால் அடித்து கொலை செய்து விட்டு, அவர் உடலை மதுக்கடை முன்பு போட்டுவிட்டு அதிகமாக குடித்து விட்டு உயிரிழந்து விட்டதாக கூறி அவர் நாடகமாடி இருக்கிறார்.

இது குறித்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், இது குறித்து நடத்திய விசாரணையில், மாராப்பன் அடித்து கொலை செய்யப்பட்டதை கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, மாரப்பனின் மனைவியிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியதில், அவரது மனைவியே  “கள்ளக் காதலனோடு சேர்ந்து, தனது கணவரை கொன்றதை ஒப்புக்கொண்டு” இருக்கிறார். அத்துடன், இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.