கடும் போதையின் உச்சத்தில் இருந்த மனைவி, தன் கணவரை சரமாரியாகக் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

ஐதராபாத்தை சேர்ந்த 42 வயதான விஷால் தேவன் - 50 வயதான சபினா ரோஷன் தம்பதியினர் வசித்து வந்தனர். தம்பதிகள் இருவரும், ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் ஆவர். 

விஷால் தேவன், ராணுவத்தில் லெப்டினனட் கர்னலாக பணியாற்றி வந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே அவர் ஓய்வு பெற்றார். அதேபோல், அவரது மனைவி சபினா ரோஷனும், ராணுவத்தில் மருத்துவராக பணியாற்றி வந்த நிலையில் ஓய்வு பெற்றார். 

மருத்துவர் சபினாவிற்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இதனையடுத்து, விஷால் தேவனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் 2 வதாக திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து, விஷால் தேவன் - சபினா ரோஷன் தம்பதியினருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. இதனால், இந்த தம்பதிகள் தங்களது மகள் மற்றும் மகனுடன் வசித்து வந்தனர்.

விஷால் தேவன் - சபினா ரோஷன் தம்பதியினர் இருவருமே ராணுவத்தில் பணியாற்றியதால், அவர்கள் இருவருக்குமே மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. 

இதனால், கணவன் - மனைவி இருவரும் ஒன்றாகவே அமர்ந்து மது அருந்துவதும், அதன் பிறகு இருவரும் சேர்ந்து புகை பிடிப்பதுமாக ஏக போக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர்.

ஆனாலும், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு, இருவருக்கம் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்படுவது வழக்கமாக இருந்து உள்ளது. அத்துடன், இப்படி வரும் சண்டையில் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொள்வதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

அப்படி, கடந்த மாதம் கணவன் - மனைவி இடையே வந்த சண்டையின் போது, கணவன் விஷால் தேவன் தாக்கியதில், மனைவி சபினா ரோஷனின் முதுகெலும்பு கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. ஆனால், காயம் ஏற்பட்ட பிறகும் அவரை, அவரது கணவர் விஷால் மருத்துவமனைக்குக் கூட அழைத்துச் செல்லாமல், வெறுப்பாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனால், கணவன் மீது கடும் கோபமடைந்த மனைவி சபினா, சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது போதையில் இருந்து உள்ளார். அவருடன் அமர்ந்து அவரது கணவரும் மது அருந்தி உள்ளார். இருவரும் மது போதையில் இருந்ததால், அவர்கள் இடையேயான பிரச்சினை குறித்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்த்த, அவர்களது குழந்தைகள் இருவரும் இது வழக்கமாக நடக்கும் ஒன்றும் என்பதால் அவர்களில் பிள்ளைகள் இதனைக் கண்டுகொள்ளாமல், தூங்கச் சென்றுள்ளனர்.

அப்போது, செம போதையில் இருந்த மனைவி சபினா, கணவர் மீது கடும் கோபம் அடைந்த நிலையில், வீட்டின் கிச்சனில் இருந்த கத்தியை எடுத்து தன் கணவரை சரமாரியாகக் குத்தி உள்ளார். 

இதில், கத்தி கத்து பட்டு ரத்தம் தெறித்த நிலையில், விஷாலின் கடுமையாக அலறி துடித்து உள்ளார். தந்தையின் அலறல் சத்தம் கேட்டு, அவர்களது இரு பிள்ளைகள் ஓடி வந்து பார்த்து உள்ளனர். இதனையடுத்து. சிறு பிள்ளைகள் இருவரும் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்து உள்ளனர். அதன்படி, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்க, அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரது உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

அத்துடன், கணவனை கொலை செய்த மனைவி சபினா மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதன் காரணமாக, அவர்களது இரு பிள்ளைகளும், யாரும் இன்றி தற்போது அனாதையாக ஆகிப்போனார்கள். இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.