கணவனை இழந்த பெண் ஒருவர், 50 வயதான கொடூர காமூகன் மீது பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை அமைந்தகரை பகுதியில் உள்ள இருளாண்டி காலனி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கணவனை இழந்த நிலையில், தனிமையில் வசித்து வருகிறார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், கணவனை இழந்த பெண்ணின் பக்கத்து வீட்டில் வசிக்கும் மின்வாரிய ஊழியர் மீது, அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளார். 

இது குறித்து அந்த பெண் அளித்துள்ள புகாரில், “எனது பக்கத்து வீட்டில் வசித்து வரும் 50 வயது மதிக்கத்தக்க மின்வாரிய ஊழியர், தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

அவர் மது போதைக்கு அடிமையானவர். இதனால், என் மீது மோகம் கொண்டு, தொடர்ச்சியாக என்னை அவர் பாலியல் தொந்தரவு செய்து வருகிறார்” என்றும், அந்த புகாரில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், “கணவரை இழந்து வாழ்ந்து வந்த என்னை, காம இச்சையைத் தீர்க்க வருமாறு ஆபாசமாகப் பேசி, பல்வேறு வகையில் எனக்குத் தொடர்ந்து அவர் பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார் என்றும், ஆனால் அவரது இச்சைக்கு நான் மறுப்பு தெரிவித்து விட்டேன்” என்றும், அவர் கூறியுள்ளார். 

இந்நிலையில், “பொங்கல் பண்டிகை தினத்தில் இரவு 7 மணியளவில் தனிமையில் இருந்த என்னிடம் அவர் தவறாக நடக்க முயற்சி செய்தார். போதையிலிருந்த அந்த காமுகன், என்னை கட்டியணைத்துக்கொண்டு பாலியல் தொல்லை கொடுத்தான்” என்றும், அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார். 

“ஆனால், நான் அவனை தள்ளி விட்டு வீட்டை விட்டு வெளியே ஒடி வந்து விட்டேன். ஆனாலும், என்னை விரட்டி வந்த அந்த கொடூரன் எனது கன்னத்தைக் கடித்து விட்டுத் தப்பி ஓடிவிட்டான்” என்றும், அந்த புகாரில் பாதிக்கப்பட்ட அந்த பெண் கூறியுள்ளார். 

இதனால், “காயமடைந்த நான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், அந்த பெண் குற்றம்சாட்டி உள்ளார்.

அத்துடன், “அந்த பக்கத்து வீட்டு காமூகன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும், அந்த புகாரில் பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டு உள்ளார்.

இது தொடர்பான புகாரை ஏற்ற காவல் துறையினர் தற்போது வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வரும் வருகின்றனர். இந்த சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.