சின்னதிரை பாண்டிய ஸ்டோர் சித்ரா தற்கொலை செய்துக்கொண்ட செய்தி தமிழ்நாட்டில் அதிர்ச்சியை கிளம்பி இருக்கிறது. 28 வயதாகும் சித்ராவுக்கு சமீபத்தில் ஹேமந்த் ரவி என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இரண்டு மாதங்களுக்கு முன்பு பதிவு திருமணம் முடித்திருக்கிறார்கள். நேற்று இரவு தனியார் ஓட்டலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.


தூக்கிட்டு இருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சித்ராவின் கழுத்தில் இருக்கும் காயம், அவர் புடவையில் தூக்கு மாட்டிக்கொண்டனால் ஏற்பட்டு இருக்கலாம் என்றாலும் அவரின் கன்னத்தின் ரத்தம் காயத்துடன் இருக்கும் நகக்கீரல்கள் தற்போது சந்தேகத்தை கிளம்பி இருக்கிறது.

அதனால் சித்ராவின் கன்னத்தில் இருக்கும் காயம் எப்படி ஏற்பட்டது என சித்ராவுடன் ஹோட்டலில் தங்கியிருந்த ஹேமந்த் ரவியிடம் காவல் துறை விசாரணை நடத்தி வருகின்றனர். சித்ராவின் தாயாருக்கும் ஹேமந்துக்கும் தொடர்ச்சியாக பிரச்சனைகள் ஏற்பட்டதால் சில தினங்களுக்கு முதல் சித்ராவும் ஹேமந்தும் அறை எடுத்து தங்கி வந்து இருக்கிறார்கள்.


சித்ராவும் அவரது கணவரும்  ரூமுக்கு வந்ததே நள்ளிரவு 2.30 மணிக்கு தான் என்றும் 3 மணிக்கு சித்ராவின் தற்கொலை நடந்துள்ளது என்றும் இடைப்பட்ட அரை மணி நேரத்தில் தகராறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் மனமுடைந்து சித்ரா இந்த முடிவை எடுத்திருக்க கூடும். என்ன பிரச்சனை என விசாரணை நடத்தி வருகிறோம் என்கிறார்கள் போலீஸ் தரப்பில்.
தற்போது அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சித்ரா மிகவும் தைரியமான பெண். அவர் இந்த முடிவை எடுத்து இருக்க மாட்டார் என்றும் சித்ராவின் கன்னத்தில் காயம் இருப்பதால் அவரை கொலை செய்து இருக்கிறார்கள் என்று சித்ராவின் தரப்பில் பேசப்பட்டு வருகிறது.