“கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக ஏன் பயப்படுகிறார்கள்?” என்கிற கேள்வி எழுந்து உள்ளது.

தமிழக அரசியலில் கொடநாடு கொலை விவகாரம்,  மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, சட்டசபையில் விவாதிக்க காங்கிரஸ் கட்சி சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளன.

இப்படியாக, கொடநாடு விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியினர், சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர உள்ள நிலையில், அதிமுக எம்.எல்.ஏ. க்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார் என்றும், தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனையடுத்து, “கொடநாடு விவகாரம் அவசரமாக விவாதிக்க வேண்டிய ஒன்றா?” என்று, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில், இது தொடர்பாக சட்டப்பேரவை வளாகத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது, ““கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க அதிமுக ஏன் பயப்படுகிறார்கள்?” என்று, கேள்வி எழுப்பினார்.

அத்துடன், “கோடநாடு விவகாரம் குறித்து சட்டப் பேரவையில் விவாதிக்க தயார் இல்லை என்றால், மக்கள் மன்றத்தில் விவாதிக்க காங்கிரஸ் தயார்” என்றும், அவர் குறிப்பிட்டார். 

மேலும், “சயான், மனோஜ் ஆகிய இருவரும் ஏன் ஜாமினில் வெளியே வந்தார்கள்?” என்றும், அவர் அடுத்தடுத்து கேள்விகளை முன்வைத்தார்.

“அப்படி, ஜாமீனில் வெளியே வந்தவர்கள் டெல்லியில் பத்திரிகையாளர்களை சந்தித்தது ஏன்? என்றும், ஜெயக்குமார் தேவையில்லாத கருத்துக்களை கூறி வருகிறார்” என்றும், அவர் குற்றம்சாட்டினார். 

“கோடநாடு விவகாரம் குறித்து விவாதிக்க ஏன் அதிமுகிவனர் பயப்படுகிறார்கள்” என்று மீண்டும் கேள்வி எழுப்பிய செல்வபெருந்தகை, “கோடநாடு விவகாரத்தில் ராஜேஷ்குமார் நாவலை விட மர்மங்கள் அதிகமாக நிறைந்து உள்ளதாகவும்” அவர் குற்றம்சாட்டினார்.

அதே போல், இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் தங்கம் தென்னரசு, “கோடநாடு விவகாரம் மறு விசாரணை செய்யப்படவில்லை என்றும், மேலதிக விசாரணை தான் செய்யப்படுகிறது” என்றும், அவர் குறிப்பிட்டார்.

மேலும், “கோடநாடு விவகாரம் பற்றி முதலில் பேசியது அதிமுகவினர் தான் என்றும், கோடநாட்டில் நடந்தது சாதாரண சம்பவம் அல்ல என்றும், இந்த கோடநாடு விவகாரம் பற்றி ஜெயக்குமார் மிகுந்த பதற்றத்தில் பேசுகிறார்” என்றும்,  அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.

குறிப்பாக, “சட்டம் ஒழுங்கு விவகாரம் பற்றி முதலமைச்சர் பேசக் கூடாது என ஜெயக்குமார் சொல்வது வேடிக்கையாக உள்ளது” என்றும், அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.