முல்லை பெரியாறு அணையிலிருந்து உச்சநீதிமன்ற ஆணைப்படியே நீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்துள்ளார்.

durai

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக அரசு அதிகாரிகள்தான் தண்ணீரை திறந்து விட்டனர் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். அந்த நேரத்தில் கேரள நீர்வளத்துறை அமைச்சரும் அம்மாநில அலுவலர்களும் அணையை பார்வையிட்டனர் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் துரைமுருகன் வெளியிட்ட  அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் ஏன் திறந்து விட்டார்கள் எனவும், கேரள மாநில அமைச்சர்கள் தண்ணீரை திறக்கலாமா எனவும் எதிர்கட்சி துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் கேள்வி கேட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ''முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் டாக்டர் ஜோசப் தாக்கல் செய்த ரிட் மனுவின் தீர்ப்பின் வழிக்காட்டுதலின்படியே தண்ணீர் திறக்கப்பட்டது. 29 ஆம் தேதி நீர்வள அலுவலர்களால் அணை திறக்கப்பட்டது.  முன்னெச்சரிக்கைக்காக கேரள அரசிற்கு அறிவிக்கப்பட்டது. கேரள அமைச்சர்கள் வந்தது தற்செயலானது. அணையில் நீர் இருப்பு 138 அடிதான் இருக்க வேண்டும். 29-ம் தேதி 138.75 அடியாக நீர் இருந்ததால், தண்ணீரை வெளியேற்ற வேண்டிய சூழல் உருவானது. பூகம்பம் வர வாய்ப்பு இருப்பதாக கூறி 136 அடிக்கு முல்லைப் பெரியார் அணையின் நீர் இருப்பை குறைக்க வேண்டும் என கேரள அரசு கோரிக்கை விடுத்துள்ளது என அமைச்சர் தெரிவித்தார். 

இந்நிலையில் உச்ச நீதி மன்றம்  உத்தரவின்படியே முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதாக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேலும் முல்லைப் பெரியாறு அணை குறித்த விளக்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளேன். முல்லை பெரியாறு அணையில் தண்ணீர் திறப்பு தொடர்பாக நீதிமன்ற உத்தரவு உள்ளது.

ரூல் கர்வ் விதிமுறையின் படியே 29-ந் தேதி முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறந்துவிடப்பட்டபோது கேரள அமைச்சர்கள் அங்கு தற்செயலாக வந்திருந்தனர் என்றும் ரூல் கர்வ் என்ற விதிப்படி அணையில் நீர்மட்டத்தை குறைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது என்று அமைச்சர் துரைமுருகன் விளக்கம் தெரிவித்தார். உச்ச நீதி மன்றம்  உத்தரவின்படியே முல்லை பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கேரள அரசிடம் தெரிவித்த பிறகே அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது எனவும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார் .