விருதுநகர் அருகே வளர்ப்பு மகளுக்கு 2 ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த சிறுமியின் தந்தையும், அண்ணனும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பாறைப்பட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியினருக்குத் திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆன பிறகும், அவர்களுக்குக் குழந்தை பிறக்கவில்லை. இதனையடுத்து, கடந்த 11 வருடங்களுக்கு முன்பு, தன் ரத்த வழி உறவினர் ஒருவரின் மகளைத் தத்தெடுத்து வளர்த்து வந்தனர். தற்போது, அந்த சிறுமிக்கு 11 வயது நடக்கிறது. அந்த சிறுமி, அந்த பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார்.

இதனிடையே, தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள விடுமுறையால், சிறுமி வீட்டில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், பெற்றால் தான் பிள்ளையா, தத்தெடுத்து வளர்த்தாலும், அது தன் பிள்ளை, தன் குழந்தை என்பதை மறந்து, தன்னுடைய 11 வயது குழந்தைக்கு, அவரது 54 வயதான வளர்ப்புத் தந்தை தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இப்படியாக, அந்த சிறுமிக்கு 9 வயது இருக்கும் போதே, அந்த 

சிறுமியிடம் எதையோ பார்த்து, சபலப்பட்ட அந்த வளர்ப்புத் தந்தை, தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாகவே, பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார்.

இது குறித்து, அந்த சிறுமியின் வளர்ப்புத் தந்தையின் அண்ணன் மகன், அண்ணன் முறையான அவனிடம் சிறுமி இது குறித்துக் கூறியதாகத் தெரிகிறது. 

இதனையடுத்து, அவனும் இதனை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள நினைத்து, அவனும் தன் தங்கை என்றும் பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான். தன் பங்கிற்கு, கடந்த ஒரு வருடமாகவே, தன் தங்கையை அவன் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளான்.

மேலும், “இது குறித்து வெளியே யாரிடமாவது சொன்னால், உன்னைக் கொலை செய்து விடுவோம்” என்றும், அவர்கள் இருவரும் தனித் தனியாக மிரட்டி உள்ளனர். இதனால், உயிர் பயத்தில் அந்த சிறுமி இது பற்றி யாரிடமும் எதுவும் சொல்லாமல் இருந்து வந்துள்ளார்.

சிறுமியும், இது குறித்து யாரிடமும் எதுவும் வாய் திறக்காத நிலையில், இதையே தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அப்பனும் - மகனும், சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.

இதன் காரணமாக, சிறுமிக்குத் தொடர்ந்து உடல் நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து தொடர்ந்து அந்த சிறுமியும் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில், சிறுமியின் வளர்ப்புத் தாய்க்கு சந்தேகம் வந்து, தன் வளர்ப்பு மகளிடம் என்ன நடக்கிறது என்று தீவிரமாக விசாரித்துள்ளார். அப்போது, “அப்பாவும், அண்ணனும் சேர்ந்து என்னை 2 வருடங்களாக பாலியல் வன்கொடுமை செய்து வருவதாக” சிறுமி அழுதுகொண்டே எல்லாவற்றையும் கூறி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் வளர்ப்புத் தாய், அங்குள்ள காவல் நிலையத்தில் தன் கணவன் மீதும், கணவனின் அண்ணன் மகன் மீது புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார், சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதனையடுத்து, சிறுமியின் வளர்ப்புத் தந்தை, அவரது அண்ணன் மகன் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வளர்ப்புத் தந்தை மற்றும் அண்ணனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமியை, போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்குச் சிறுமிக்கு பலவிதமான பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, 11 ஆண்டுகளாக வளர்த்து வந்த மகளை, வளர்ப்புத் தந்தையும், அண்ணனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.