திருமணத்துக்கு மறுத்த காதலியைக் குத்தி கொல்ல முயன்ற காதலனை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், களமருதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதான சக்திவேல், சிதம்பரத்தில் உள்ள கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது, 18 வயது இளம் பெண் ஒருவரும், அவருடன் அங்கே பணியாற்றி வந்துள்ளார். இதனையடுத்து, இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து, இருவரும் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

 Villupuram youth murder attempt after girl rejects marriage proposal

இந்த காதல் விவகாரம், கடையின் ஓனருக்கு தெரிய வரவே, இருவரையும், அவர் வேலையை விட்டு நிறுத்தி விட்டார். 

இதனால், அந்த பெண் சிதம்பரம் அடுத்த வடமூர் கிராமத்தில் உள்ள தனது பாட்டில் விட்டில் சென்று தங்கிவிட்டார். அதேபோல், சக்திவேல் சென்னைக்கு வந்து வேலை செய்து வந்தார்.

 Villupuram youth murder attempt after girl rejects marriage proposal

இந்நிலையில், தனது காதலியைப் பார்க்க வடமூர் கிராமத்திற்குச் சென்ற சக்திவேல், அங்குத் தனது காதலியுடன் சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது, திருமணம் செய்துகொள்வது தொடர்பாக சிவக்குமார் பேசிய நிலையில், திருமணம் செய்ய அப்பெண் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த காதலன், திடீரென்று, தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தன் காதலியைக் கழுத்து மற்றும் நெஞ்சில் வெட்டிவிட்டு, தப்பி ஓடியுள்ளார்.

இதில், ரத்த வெள்ளத்தில் கதறித் துடித்த அப்பெண்ணை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு, உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இது தொடர்பாக விரைந்து வந்த போலீசார், வழக்குப் பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விசாரணை நடத்தினர். அப்போது, “திருமணத்திற்கு மறுத்ததால், சிவக்குமார் தன்னை கொல்ல முயன்றதாக” அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

 Villupuram youth murder attempt after girl rejects marriage proposal

இதனையடுத்து, தலைமறைவான சிவக்குமாரை, போலீசார் கைது செய்தனர். இதனிடையே, திருமணத்திற்கு மறுத்த காதலியை, காதலனே கொலை செய்ய முயன்ற சம்பவம், அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.