தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக மறைந்த மக்களவை உறுப்பினர் வசந்தகுமாரின் மகன் நடிகர் விஜய் வசந்த் நியமிக்கப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.யாக இருந்த வசந்தகுமார் மறைவைத் தொடர்ந்து, கன்னியாகுமாரி நாடாளுமன்றத் தொகுதி காளியானது. இதனால், கன்னியாகுமரி தொகுதியில் எச்.வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் போட்டியிட வேண்டும் என்ற குரல்கள் கடந்த சில மாதங்களாக எழுந்துகொண்டே இருந்தன. வசந்த அன் கோ உரிமையாளர் வசந்தகுமார் அண்ணாச்சியின் மறைவைத் தொடர்ந்து, “அவர் இருந்த இடத்திற்கு நீங்கள் வரணும்” என்று, நடிகர் விஜய் வசந்தை அவரது அபிமானிகள் அரசியலுக்கு இழுப்பதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளியாகிக்கொண்டே இருந்தது.

இதனால், மறைந்த வசந்தகுமாரின் 7 ஆம் நாளை அனுசரிக்கும் வகையில் கன்னியாகுமரியில் மவுன ஊர்வலம் நடைபெற்ற பேது, அதில் கலந்துகொண்ட 
விஜய் வசந்த், மவுன ஊர்வலத்தின் இறுதியில் தேர்தலில் போட்டி குறித்த செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கும் விதமாக பேசினார். அப்போது, 
“என்னுடைய தரப்பிலிருந்து எந்தவொரு முடிவுமே இது வரை நான் எடுக்கவில்லை என்றும், கட்சியிலிருந்து அப்பாவுக்குக் கொடுத்த பொறுப்பை அவர் சிறப்பாகச் செய்தார் என்றும், கட்சி என்ன முடிவெடுக்கிறதோ, அதன் படிதான் நானும் செயல்படுவேன்” என்றும், கூறியிருந்தார். 

முக்கியமாக, “தேர்தலில் நிற்பது தொடர்பாக எந்தவொரு முடிவும் இன்னும் நான் எடுக்கவில்லை என்றும், குடும்பத்துடன் ஆலோசித்துவிட்டுச் பிறகு சொல்கிறேன்” என்றும், நடிகர் விஜய் வசந்த் வெளிப்படையாகவே பேசியிருந்தார். இந்த பேட்டியை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உன்னிப்பாக கவனித்து வந்தது.

இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியில் நிர்வாகிகள் நியமனம் இன்று நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அப்போது, மறைந்த எம்.பி. வசந்தகுமார் மகன் விஜய் வசந்த் தமிழக காங்கிரஸ் பொதுச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார்.  

இது குறித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் எச். வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் 
பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்” என்று, குறிப்பிடப்பட்டு இருந்தது.

மேலும், “காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி. தங்கபாலு மகன் கார்த்தி தங்கபாலு, ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா ஆகியோருக்கும், மறைந்த முன்னாள் எம்.பி. அன்பரசு மகன் அருள் அன்பரசு உள்ளிட்டோருக்கும் கட்சியில் முக்கிய பதவிகள்” அளிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்தது.

அத்துடன், “தமிழக காங்கிரஸ் தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமனம்” செய்யப்பட்டு உள்ளார். 

அது போல், “தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவில், கே.எஸ். அழகிரி, சிதம்பரம், தங்கபாலு, திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, சுதர்சன நாச்சியப்பன், தனுஷ்கோடி ஆதித்தன்” என்று மொத்தம் 19 பேர் இடம் பிடித்திருந்தனர். 

முக்கியமாக, “தேர்தல் கொள்கை மற்றும் பிரசாரக் குழுவின் தலைவராக சு. திருநாவுக்கரசர்” நியமிக்கப்பட்டு உள்ளார். 

குறிப்பாக, “கட்சியின் செயற்குழுவின் தலைவராக கே.எஸ். அழகிரி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அந்தக் குழுவில் ப. சிதம்பரம், மாணிக்கம் தாக்கூர், கே.வி. தங்கபாலு உள்பட 56 பேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.