மனைவியுடன் வேறு மாநிலத்திற்குச் சென்று குடும்பம் நடத்தி வந்த கள்ளக் காதலனை, கணவன் குத்திக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்த சரவணன் - ரமணி தம்பதியினர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குள் பிறகு, சரவணன் மற்றும் அவரது மனைவி ரமணி இடையே அடிக்கடி பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிலையில், அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை வந்துகொண்டே இருந்துள்ளது.

அப்போது, அதே பகுதியில் உள்ள கச்சேரி தெருவில் வசித்து கோபி என்பவருடன், சரணவன் மனைவி ரமணிக்கு பழக்கம் ஏற்பட்டு, அது கள்ளக் காதலாக மாறி உள்ளது.

சரணவன் மனைவி ரமணிக்கு கோபியை ரொம்பவும் பிடித்துப் போகவே, கணவன் சரணவனை பிரிந்து கோபியை திருமணம் செய்ய முடிவு செய்தார். அதன்படி, கணவன் சரவணனிடமிருந்து எப்படியும் தப்பிச் செல்ல வேண்டும் என்று அவர் மனைவி ரமணி திட்டம் போட்டதாகத் தெரிகிறது.

திட்டமிட்ட படி, கடந்த ஆண்டு கணவன் சரணவனனுக்குத் தெரியாமல் அவர் மனைவி ரமணி, தனது காதலன் கோபியுடன், ஊரை விட்டுச் சென்றுள்ளார்.

வேலூரில் இருந்து ரமணியை பெங்களூருக்கு அழைத்துச் சென்ற கோபி, அங்கு ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர். இப்படியாக, இவர்களது வாழ்க்கை கடந்த ஒரு ஆண்டாகவே உல்லாச வாழ்க்கையாகவும், சந்தோசமான வாழ்க்கையாகவும் சென்றுகொண்டு இருந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சரவணன், கோபி ஊர் திரும்பும் நேரம் பார்த்துக்கொண்டு இருந்தான். அதன்படியே, கோபியின் உறவினர் ஒருவர் வேலூரில் இறந்து போனார். இதன் காரணமாக, பெங்களூரில் இருந்து கோபி வேலூருக்கு வந்துள்ளார். 

வேலூரில், உறவினரின் இறப்பில் கலந்துகொண்ட கோபி, உயிரிழந்தவரின் உடலோடு மயானம் வரை சென்றுள்ளார். அப்போது, சரவணனும் அவரது நண்பர்களும் அங்கு வந்து, கோபியை கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் குத்தி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். 

இதில், ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த கோபியை, அங்கு நின்றிருந்த அவரது உறவினர்கள், அங்குள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி கோபி, பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக வேலூர் தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், வேலூர் கொணவட்டம் பகுதியைச் சேர்ந்த விஜய் என்பவர், தன் தந்தையைக் கொன்ற சாலமன் என்பவரை கொலை செய்து விட்டு, அங்குள்ள காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். ஒரே நேரத்தில் இப்படி இரு வேறு இடங்களில் நடந்த கொலையால் வேலூர் பகுதி மக்கள் பீதியடைந்து உள்ளனர்.