மருமகளுக்கு மயக்க மருந்து கொடுத்து அடிக்கடி மாமனார் பாலியல் பலாத்காரம் செய்து வந்த நிலையில், மருமகளுக்குப் பெண்  குழந்தையும் பிறந்துள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் பொன்னை அடுத்து உள்ள ஓட்டேரி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண், அங்குள்ள காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பு குற்றச்சாட்டைச் சுமத்தி உள்ளார்.

அந்த 18 வயது இளம் பெண் அளித்துள்ள புகாரில், சித்தூர் மாவட்டம் ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஸ்ரீராமுலு என்பவரின் மகன்  சதீஷ்குமாருக்காக, என்னைப் பெண் கேட்டு ஸ்ரீராமுலு, எங்க வீட்டிற்கு வந்தார் என்றும், அப்போது மாப்பிள்ளையை நாங்கள் பார்க்கவில்லை” என்றும், அதில் குறிப்பிட்டு உள்ளார். 

ஆனாலும், “இந்த வரன் எங்களுக்கு வேண்டாம்” என்று, நாங்கள் தவிர்த்து விட்டோம்” என்றும் கூறியுள்ளார்.

அதனால், “ஸ்ரீராமுலு தொடர்ந்து எங்கள் வீடு தேடி வந்து என் தாயாரிடம் வந்து, 'தங்களுக்கு நிறையச் சொத்துக்கள் இருக்கின்றன என்றும், ஒரே மகன் தான் என்றும், அவனுக்கே எங்களது எல்லா சொத்துக்களும் சொந்தம் என்றும், அதனால் உங்கள் மகளை திருமணம் செய்து கொடுங்கள்' என்றும், தொடர்ந்து ஆசை காட்டி வந்தார்” என்றும், அவர் கூறியுள்ளார்.

பிறகு, “அவரது பேச்சில் சொத்துக்காக மயங்கிய என் தாயாரும், மணமகன் யார் என்று கூட பார்க்காமல் என்னை திருமணம் செய்து வைத்தனர் என்றும், ஆனால் மாப்பிள்ளை யார் என்றே பார்க்காமல் திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு நான் தள்ளப்பட்டேன்” என்றும், அவர் குறிப்பிட்டு உள்ளார்.

“இப்படியாக நடைபெற்ற அந்த கட்டாய திருமணத்திற்குப் பிறகு தான் சதீஷ்குமார், மனநிலை சரியில்லாதவர் என்பது எனக்கு தெரிய வந்தது என்றும், ஆனாலும் நான் வேறு வழியின்றி நான் தொடர்ந்து குடும்பம் நடத்தி வந்தேன் என்றும், அப்போது எனது மாமனார் என்னை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கில் என்னை அனுகினார்” என்றும், அதில் சுட்டிக்காட்டி உள்ளார்.

அதன் படி, “ஒரு முறை எனது மாமனார் எனக்கு மயக்க மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் என்றும், அதனால் அவரிடம் இது குறித்து நான் சண்டை போட்டபோது, “இதனை வெளியே சொன்னால் என் தங்கையையும், என் அம்மாவையும் கொலை செய்துவிடுவேன்” என்றும், அவர் மிரட்டினார் என்றும், இதனால் நான் பயந்துகொண்டு யாரிடமும் சொல்லாமல் இருந்ததால், இதையே தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, எனக்கு மயக்க மருந்து கொடுக்காமலேயே என்னை அவர் தொடர்ந்து பல முறை மிரட்டி மிரட்டியே என்னை பாலியல் பலாத்காரம் செய்தார்” என்றும், பகிரங்கமாகக் குற்றம்சாட்டி உள்ளார். 

“இதன் காரணமாக, நான் கர்ப்பம் அடைந்தேன் என்றும், தற்போது எனக்கு பெண் குழந்தையும் பிறந்ததுள்ளது” என்றும், அவர் கவலையோடு தெரிவித்து உள்ளார்.

“இப்படியாக, இத்தனை நாட்களும் என்னை தொடர்ச்சியாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த எனது மாமனார், இப்போது எனக்கு குழந்தை பிறந்த பிறகும், என்னை கொடுமைப்படுத்தித் துன்புறுத்தி வருகிறார்” என்றும், வேலூர் மாவட்டம் பொன்னை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.