கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. முழு ஊரடங்கு நாளான இன்று கொரோனா தடுப்பூசி போட 4000 தடுப்பு மையங்கள் தயாராக உள்ளன. 


கடந்த 90 நாட்களில் தமிழகத்தில்  52,51,820 டோஸ் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. முழு ஊரடங்கு நாளான இன்று மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள அரசு அனுமதி கொடுத்த நிலையிலும் தடுப்பூசி மையங்களுக்கு வரும் மக்களின் வருகை குறைவாக உள்ளது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.


இந்தியாவில் கடந்த ஒரே நாளில் 25.36 லட்சம் கொரொனா தடுப்பூசி போடப்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 14.09 கோடி கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சென்னையில் மட்டும் 200க்கும் மேற்பட்ட மையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்த சுகாதாரப் பணியாளர்கள் தயாராக உள்ளனர். முழு ஊடரங்க்கு அமலில் இருப்பதால் தடுப்பூசி போட்டுக்கொள்ள செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது.