தந்தையின் அலட்சியத்தால் கொதிக்கும் எண்ணெய்யில் சிறுமி விழுந்துள்ள சம்பவம் நெஞ்சைப் பதறவைக்கிறது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரமான லக்னோ சிப்ரி பஸார் பகுதியில் உள்ள உணவகம் வாசலில், இருசக்கர வாகனத்தில் தனது மகளுடன் தந்தை அமர்ந்திருக்கிறார். அப்போது, உணவகத்தின் வாசலில் அடுப்பு வைக்கப்பட்ட நிலையில், ஒரு அடுப்பில் எண்ணெய் கொதித்துக்கொண்டு இருந்தது. மற்றொரு அடுப்பில் குழம்பு வேகவைக்கப்பட்டுக் கொண்டிருந்தது.

girl falls in burning oil

அந்த நேரத்தில், இருசக்கர வாகனத்தில் அமர்ந்திருந்த சிறுமி, விளையாட்டுத் தனமாக, ஆக்ஸிலேட்டரை திருவி உள்ளார். இதில், அந்த வாகனம், வேகமாகச் சென்று, உணவகத்தின் வாசலில் உள்ள அடுப்பில் மோதி உள்ளது. மோதிய வேகத்தில், அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்த எண்ணெய், அப்படியே சிறுமி மீது கொட்டியுள்ளது. 

girl falls in burning oil

இதனால், பதறிப்போன அங்கே நின்றவர்கள், உடனடியாக சிறுமியை மீட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், நெஞ்சைப் பதற வைக்கும் நிலையில் உள்ளது.