ஒரே மாதத்தில் ஒரே சிறுவனை ஒரே பாம்பு 8 முறை கடித்த அதிசய ஆபத்து!

ஒரே மாதத்தில் ஒரே சிறுவனை ஒரே பாம்பு 8 முறை கடித்த அதிசய ஆபத்து! - Daily news

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஒரே மாதத்தில் ஒரே சிறுவனை ஒரே பாம்பு 8 முறை கடித்த அதிசய ஆபத்தான சம்பவம் ஒன்று நடந்துள்ளது, அனைவரையும் அதிர்ச்சியை அடையச் செய்துள்ளது. 

உலகத்தில் சில சமயம் சில விசித்திரங்கள் நடப்பதுண்டு. ஆனால், அது ஏன் நடக்கிறது என்று காரணத்தைத் தேடிப் போனால் பெரும்பாலும் எந்த பதிலும் கிடைப்பதில்லை. இதனாலோ என்னவோ நடக்கும் சம்பவங்கள் எல்லாம் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது. அதுபோன்ற ஒரு அதிசயமிக்க மற்றும் ஆபத்தான ஒரு சம்பவம் தான் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

உத்தரப்பிரதேச மாநிலம் ராம்புர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான யாஷ் ராஜ் மிஷ்ரா என்ற சிறுவன் தான், இந்த அதிசய ஆபத்தைச் சந்தித்து வருகிறான். 

17 வயது சிறுவன் யாஷ்ராஜ் மிஷ்ராவை, கடந்த ஒரு மாத்தில் மட்டும், குறிப்பிட்ட ஒரே பாம்பு 8 முறை கடித்து உள்ளது. இதனால், அந்த சிறுவன் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து குணமாகி வருகிறது. இப்படியாக 8 முறை இந்த சம்பவம் நடந்துள்ளது தான், மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.

கடைசியாக ஆகஸ்ட் 25 ஆம் தேதி அன்று, அந்த சிறுவனை குறிப்பிட்ட அந்த பாம்பு 8 வது முறையாக கடித்து உள்ளதாக, அந்த சிறுவனின் பெற்றோர்கள் கூறியுள்ளனர்.

இது தொடர்பாகச் சிறுவனின் தந்தை சந்திரமௌலி மிஷ்ரா கூறும் போது, “என் மகனை ஒரே பாம்பு அடிக்கடி கடிப்பது எனக்கு மட்டுமில்லாமல், எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் பயங்கர வியப்பாக இருக்கிறது. எங்கள் மகனுக்குச் சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கும் இதனால் குழப்பிப் போய் உள்ளனர்.

என் மகனை 3 வது முறையாக அந்த குறிப்பிட்ட பாம்பு கடித்த போது, சிகிச்சைக்குப் பிறகு அவனை அருகில் உள்ள பஹதுர்புர் கிராமத்தில் இருக்கும் எனது எனது உறவினர் ஒருவர் வீட்டில் தங்க வைத்தேன். ஆனாலும், வெளியூர் சென்ற பிறகும் கூட, அவனை அதே பாம்பு தேடி வந்து பார்ப்பதாக  என் மகன் என்னிடம் கூறினான். 

இப்படி என் மகன் என்னிடம் இந்த தகவலைத் தெரிவித்த அடுத்த நாளே அந்த பாம்பு, என் மகனைக் கடித்தது. இதனையடுத்து, அவன் மருத்துவமனையில் அனுமதிக்கச் செய்து, சிகிச்சை அளித்தோம்” என்றும் தெரிவித்தார்.

மேலும், “ஒட்டு மொத்தமாக இதுவரை எங்கள் மகனை அந்த பாம்பு 8 முறை கடித்து உள்ளது. நாங்களும், எங்கள் குடும்பத்தினரும் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து பார்த்து விட்டோம். 

முக்கியமாக, பாம்பாட்டியை வைத்து அந்த பாம்பை பிடிக்கவும் முயன்றோம். ஆனாலும், அந்த பாம்பு பிடிபடவில்லை. அத்துடன், பாம்பு பிடிப்பவர்கள் கூறும் வைத்தியங்களையும் செய்து பார்த்து விட்டோம். பல பூஜைகளும், பரிகாரங்களும் செய்து பார்த்து விட்டோம். ஆனால், விடாமல் எங்களை மகனை அந்த பாம்பு துரத்தித் துரத்தி கடிப்பது வேதனையாகவும், ஆச்சரியமாகவும் இருக்கிறது” என்று கவலையாகக் கூறினார்.

பாம்பு கடித்து தற்போது சிகிச்சையில் உள்ள சிறுவன், மீண்டும் பாம்பு வந்து கடித்து விடும் என்று பயத்திலும், மன உளைச்சலிலும் கடும் அவதி அடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment