சென்னையில் மழையின் காரணமாக சூறைக்காற்றால் மரங்கள் வேரோடு சாய்ந்து   மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

minதமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இதனால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் கடந்த 4 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் சூழ்ந்துள்ளது. மேலும், சாலைகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். வெள்ளத்தில் சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் கடந்த சனிக்கிழமையில் இருந்து மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று மாலையில் இருந்து இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை சென்னை அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், தரைக்காற்று 40 முதல் 45 கி.மீட்டர் வேகத்தில் வீசும் என எச்சரித்தது. தற்போது சென்னையில் எழும்பூர், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதியில் பலத்த காற்று வீசி வருகிறது.

இதனால் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுகிறது. கிண்டி ஆளுநர் மாளிகை அருகே இன்று காலை மரம் ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. இதற்கிடையே பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.