ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியை யார் கை பற்ற போகிறார்கள் என்று, தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பாகவே காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மகனுக்கும், அதிமுவின் ஈஸ்வரமூர்த்திக்கும் இடையே கடும் போட்டா போட்டி நிலவுகிறது. 

தமிழக தேர்தல் களம் சூடுப்படித்திருக்கிறது என்பதையெல்லாம் இது போன்ற சம்பவங்கள் தான், நமக்கு நினைவுப்படுத்துகிறது. 

தமிழகத்தில் சட்டப் பேரவை தேர்தல் நெருங்கி வர உள்ளதை முன்னிட்டு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பலரும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் சென்று சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். 

இது புறம் என்றாலும், இந்திய தேர்தல் ஆணையமானது, தேர்தல் தேதியையே இன்றும் அறிவிக்கைவில்லை. இவற்றுடன், எந்த தொகுதி எந்த கட்சிக்கு என்கிற கூட்டணி உடன்பாடும் என்னும் ஏற்படவில்லை. எந்த தொகுதியில் யார் போட்டியிடுகிறார்கள் என்ற எந்த ஒரு விசயமும் நடைபெறவில்லை. ஆனால், அதற்குள்ளாக ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியை கைப்பற்றுவதற்காக காங்கிரஸ் கட்சியும், ஆளும் கட்சியான அதிமுகவும் வரிந்துகட்டிக் கொண்டு களப் பணிகளை செய்து வருகின்றன. இதனால், ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் தற்போது அனல் பறந்துகொண்டு இருக்கிறது. மொடக்குறிச்சி தொகுதியே தற்போது பரபரப்பு அடைந்துள்ளது.

அதாவது, ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி தொகுதியில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி போட்டியிட விரும்புவதாக தெரிகிறது. 

அந்த தொகுதியில், முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா, சமீபகாலங்களாக ஈரோட்டிலேயே தங்கியிருந்து சட்டப் பேரவைக்கான தேர்தல் களப் பணிகளை முன்னெடுத்து வருகிறார். இதனால், இந்த மொடக்குறிச்சி தொகுதியில் அவரே போட்டியிட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை என்று, பலரும் பேசத் தொடங்கி உள்ளனர்.

அதே நேரத்தில், அந்த தொகுதி தற்போது வசம் உள்ளது. அதிமுகவில் இப்போது சிட்டிங் எம்.எல்.ஏ.வாக உள்ள வி.பி.சிவசுப்பிரமணியத்திற்கு, மீண்டு வாய்ப்பு கொடுக்க முதலமைச்சர் தரப்பு தயங்குவதாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக, கடந்த 2017 ஆம் ஆண்டு அதிமுகவில் உருவான சர்ச்சையின் போது, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து பேசிய எம்.எல்.ஏ.க்களில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. வி.பி.சிவசுப்பிரமணியமும் ஒருவர் ஆவார். இதனால், மீண்டும் இவருக்கு வாய்ப்பு கிடைப்பது என்பது, அக்கட்சியில் குதிரை கொம்பாகவே இருக்கும் என்றும், அந்த கட்சியினரே வெளிப்படையாக பேசத் தொடங்கி உள்ளனர்.

மேலும், குறிப்பிட்ட இந்த தொகுதியில் எழுமாத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் ஈஸ்வரமூர்த்தியை நிறுத்தினால், காங்கிரஸ் கட்சியை எளிமையாக வென்று விடலாம் என்றும், அதிமுக தலைமை கணக்கு போடுகிறது. அந்த அளவுக்கு, இந்த தொகுதியில் ஈஸ்வரமூர்த்திக்கு உள்ள தனிப்பட்ட செல்வாக்கு அதிகம் என்றும், கூறப்படுகிறது.

அதே நேரத்தில், செல்வகுமார சின்னையன், ஆர்.பி. கதிர்வேல், என அதிமுகவில் பலரும் சீட் எதிர்பார்த்து காத்திருந்தாலும், தற்போதைய சூழலில் முதல்வரின் நம்பிக்கையை பெற்றவராக இருக்கும் ஈஸ்வரமூர்த்திக்கே சீட் கிடைக்கும் என்று, அந்த பகுதியில் உறுதியாக அடித்து சொல்கிறார்கள். 

இதன் காரணமாக, ஈரோடு மொடக்குறிச்சி தொகுதியில் திமுக நேரடியாக போட்டியிட வேண்டும் என அக்கட்சியினரும், திமுக தலைமைக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால், தேர்தல் கூட்டணி உடன்பாடு ஏற்படும் முன்பே தொகுதி யாருக்கு என்பதில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுக்குள் கருத்து மோதல் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.