2020 ஆம் ஆண்டு டிவிட்டரில் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்கள் யார் யார் என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளன. 

எப்போது சினிமா நட்சத்திரங்கள் பற்றி அறிந்துகொள்ள ரசிகர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் ஒரு இனம் புரியாத ஆசை இருந்துகொண்டே இருக்கும்.

அந்த வகையில், தற்போது 2020 ஆம் ஆண்டின் இறுதி மாதத்தில் நாம் இருப்பதாலும், இன்னும் 16 நாட்களில் புதிதாக 2021 ஆம் ஆண்டு பிறக்க இருப்பதால், உலகெங்கிலும் உள்ள மக்கள் இந்த 2020 ஆம் ஆண்டில் சமூக ஊடகங்களில் யார் யாரை தேடினார்கள் என்பது பற்றிய தகவலும் வெளியாகி உள்ளது.

இது தொடர்பாக டிவிட்டர், இந்தியாவின் ஆண்டு அறிக்கையை “This Happened 2020” என்ற பெயரில் வெளியிட்டு உள்ளது.

அதன் படி, கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் நவம்பர் 15 ஆம் தேதி வரையில் இருக்கும் கால கட்டங்களில் எந்த தென்னிந்தியத் திரைப்படங்கள், எந்த தென்னிந்திய நடிகர்கள், எந்த தென்னிந்திய நடிகைகள் பற்றிய பதிவுகள் அதிகமாக இருந்தன?” என்ற பட்டியலை, டிவிட்டர் இந்தியா தற்போது வெளியிட்டு உள்ளது.

டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள அந்த பட்டியலின் படி, “2020 ஆம் ஆண்டில் திரைப்படங்கள் பற்றிய டிவிட்டர் பதிவுகளில் அதிகம் இடம் பெற்ற ஹேஷ்டேக்குகளில் “#Master திரைப்படம் முதலிடம்” பிடித்து உள்ளது. 

அதே போல், “#VakeelSaab #SarkaruVaariPaata #Valimai #Sooraraipotru #RRR #Pushpa #SarileruNeekevvaru #KGFChapter2 #Darbar ஆகிய படங்கள் வரிசையாக 2 முதல் அடுத்தடுத்து முதல் 10 இடங்கள் வரை பிடித்து உள்ளது. 

இது தொடர்பாக டிவிட்டில் “தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் எந்த திரைப்படங்கள் அதிக முறை டிவிட் செய்யப்பட்ட படங்கள் என்ற விபரங்களையும் வெளியிட்டுள்ளது.

மேலும், டிவிட்டர் இந்தியா வெளியிட்டுள்ள மற்றொரு பதிவில், “நீங்க ஆவலோடு காத்திட்டுருந்த moment வந்தாச்சு! 2020 ல் Most Tweeted About South Indian Superstars” என்றும், குறிப்பிட்டு 2020 ஆம் ஆண்டில் பதிவுகள் அதிகம் பகிரப்பட்ட டாப் 10 நடிகர்கள் பற்றிய பட்டியல் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது.  

அந்த பட்டியலில், தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, முதல் இடம் பிடித்து அசத்தி உள்ளார். அவரைத் தொடர்ந்து, பவன் கல்யாண் 2 வது இடமும், நடிகர் விஜய் 3 வது இடமும், ஜூனியர்  என்டிஆர் 4 வது இடமும் பிடித்து அசத்தி உள்ளனர்.

அது போல், தமிழக நடிகர்களில் சூர்யா 5 வது இடம் பிடித்து உள்ளார்.

நடிகர் அல்லு அர்ஜுன் 6 வது இடமும், ராம் சரண் 7 வது இடமும் பிடித்து அந்த பட்டியலை அலங்கரிக்கின்றனர்.

அத்துடன், நடிகர் தனுஷ் 8 வது இடமும், மலையாள நடிகர் மோகன் லால் 9 வது இடமும், சிரஞ்சீவி 10 வது இடமும் பிடித்து அந்த பட்டியலை அலங்கரிக்கின்றனர்.

மேலும், டிவிட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள 2020 ஆம் ஆண்டில் அதிகம் பகிரப்பட்ட பதிவுகள், டாப் 10 நடிகைகள் பட்டியலின் படி, கீர்த்தி சுரேஷ் முதல் இடம் பிடித்து அசத்துகிறார். 

2 வது இடத்தில், நடிகை காஜல் அகர்வாலும், 3 வது இடத்தில் நடிகை சமந்தாவும், 4 வது இடத்தில் நடிகை ராஷ்மிகாவும் பிடித்து உள்ளனர்.

நடிகை பூஜா ஹெக்டே 5 வது இடத்திலும், நடிகை டாப்சி 6 வது இடத்திலும், தமன்னா 7 வது இடத்திலும், ரகுல் ப்ரீத் சிங் 8 வது இடத்திலும் பிடித்து அசரத்தி உள்ளனர்.

முக்கியமாக, நடிகை ஸ்ருதி ஹாசன் 9 வது இடமும், நடிகை திரிஷா 10 வது இடமும் பிடித்து அந்த பட்டியலை அலங்கரிக்கின்றனர். 

குறிப்பாக, இந்த நடிகர்கள், நடிகைகள் பட்டியலில் தமிழகத்தின் தல அஜித் மற்றும் நடிகைகளில் முதல் தர வரிசையில் இடம் பிடித்திருக்கும் நடிகை நயன்தாரா ஆகியோர் இடம் பிடிக்கவில்லை. இந்த நிகழ்வு, தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

அதே போல், டிவிட்டர் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ள “இந்தியாவின் ஆண்டு அறிக்கையை 'This Happened 2020' ” என்ற செய்தி, இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.