தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

மார்ச் 28, 29-ம் ஆகிய தேதிகளில் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களின் ஊதியம் பிடிக்கப்பட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் இயங்கி வரும் சில தொழிற்சங்கங்கள் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி மார்ச் 28, 29 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். 

இந்நிலையில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படுவதோடு, ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஊழியர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது பொதுமக்களுக்கு பாதகம் ஏற்படுத்தக் கூடிய செயலாகும். கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் ஆகிய அனைத்து அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் பொது மக்களுக்கு வேலைநிறுத்தங்கள் இடையூறை ஏற்படுத்தும் என தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து மார்ச் 28, 29 ஆகிய தேதியில் எந்த விதமான விடுப்பும் அனுமதிக்கப்படமாட்டாது. ஏற்கனவே அளிக்கப்பட்ட விடுப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. பணிக்கு வருகை தரவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும். பணிக்கு வருகை தராமல் இருக்கும் பணியாளர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில், மின்சாரதுறையும்  28 மற்றும் 29-ம் தேதிகளில் வேலை நிறுத்தம் செய்தால் சம்பளம் கிடையாது என  மின்சார வாரியம் அறிவித்துள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.