2022 -23 ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டில்,  சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

தமிழக சட்டமன்றம் இன்று காலை கூடியதும் அதிமுகவினரின் கடும் அமளிக்கு இடையே இந்த ஆண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து, உரையாற்றினார்.

அதாவது, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆகஸ்ட் மாதம் திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிலையில் , தற்போது 2 வது முறையாக முழுமையான நிதிநிலை அறிக்கையை சட்டப் பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.

அதன்படி, 

- தமிழ்நாட்டில் இருந்து உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும் ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும் உருவாக்க தமிழ்நாடு ஒலிம்பிக் தங்க பதக்க தேடல் திட்டம் புதிதாக உருவாக்கப்படும்.

- ஒலிம்பிக் போட்டிகளில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வெல்லும் அளவுக்கு உலகத்தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க 25 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப் பதக்க தேடல் திட்டத்திற்கு 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. 

- வட சென்னையின் ஆர்.கே.நகர் தொகுதியில் விளையாட்டு வளாகம் அமைக்கப்படும் என்றும், தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

- வானிலையை கணிக்க புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட கட்டமைப்பை உருவாக்க 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- வானிலை ஆய்வு மையத்தை தொழில் நுட்ப ரீதியாக மேம்படுத்த 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  

- தமிழகத்தின் ஏற்றுமதியை மேம்படுத்த 100 கோடி ரூபாயில் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- சென்னை நகரை இன்னும் சூப்பராக மாற்றும் விதமாக, சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- சென்னை நந்தம்பாக்கத்தில் புத்தொழிலில் உருவாக்க மையம் அமைக்க 75 கோடி ரூபாயில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தரைப்பாலங்கள் வெள்ளநீரில் மூழ்கும் இடங்களில் மேம்பாலங்கள் அமைக்க 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- சென்னை கிழக்கு கடற்கரை சாலையை 6 வழிச் சாலையாக அகலப்படுத்த 135 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு. 

- தமிழகம் முழுவதும் உள்ள பழமையான அரசு கட்டடங்களை சீரமைக்க 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

- தமிழக காவல் துறைக்கு 10,285 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.