திருவண்ணாமலையில் கள்ளக் காதலியின் 8 வயது மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வந்ததோடு அதை வீடியோ எடுத்து கள்ளக் காதலன் மிரட்டிய சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை அண்ணா நகர் பகுதியில் கணவனைப் பிரிந்து தனது 8 வயது சிறுமி உடன் பெண் ஒருவர் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது, அந்த பகுதியைச் சேர்ந்த ஜாவித் என்ற இளைஞர், அந்த பெண்ணுடன் அறிமுகம் ஆகி உள்ளார்.

அதன் தொடர்ச்சியாக அந்த பெண்ணுக்கும் ஜாவித்திற்கும் இடையே கள்ளக் காதல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அந்த பெண்ணின் வீட்டில் அடிக்கடி உல்லாச இன்பத்தில் ஈடுபட்டு வந்து உள்ளனர். அத்துடன், தனது கள்ளக் காதலனை, சிறுமியிடம் “அப்பா” என்று கூப்பிடுமாறு அந்த பெண் வலியுறுத்தி உள்ளார்.

ஆனால், அந்த சிறுமி “தன்னை கட்டாயப்படுத்த வேண்டாம்” என்று கூறியதாக தெரிகிறது. இப்படியே, அந்த சிறுமியின் தாயாருக்கும் சாவீத்திற்கும் இடையே உல்லாச வாழ்க்கை சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில், தன் கள்ளக் காதலியின் மகள் 8 வயது சிறுமி மீது, ஜாவித் சபலப்பட்டு உள்ளான். அத்துடன், அந்த சிறுமியையும் எப்படியும் அடைந்து விட வேண்டும் என்று, ஜாவித் துடியாய் துடித்துக்கொண்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

அதன்படி, தன் கள்ளக் காதலி வீட்டில் இல்லாத நேரம் பார்த்து அங்கு வந்த ஜாவித், வீட்டில் தனிமையில் இருக்கம் சிறுமியிடம் தொடர்ந்து அத்து மீறி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அத்துடன், “இது தொடர்பாக வெளியே யாரிடமாவது சொன்னால் கொலை செய்து விடுவேன்” என்றும், மிரட்டியே ஜாவித் பாலியல் வன்கொடுமை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாக, பல மாதங்களாக அந்த 8 வயது சிறுமியிடம் ஜாவித் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

மேலும், கொடூரத்தின் உச்சமாகக் கடந்த சில நாட்களுக்கு அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்யும் போது, அந்த காட்சிகளை ஜாவித், தனது செல்போனில் வீடியோவாக எடுத்துக்கொண்டதாகத் தெரிகிறது. அதன் தொடர்ச்சியாக, அந்த சிறுமியை அவன் தொடர்ந்து மிரட்டி தன் ஆசைக்கும், பாலியல் இச்சைக்கும் தகுந்தார் போல் இன்னும் பயமுறுத்தி அந்த சிறுமியை நாசம் செய்யத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில், அந்த 8 வயது சிறுமியால் பாலியல் வன்கொடுமையின் வலியைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால், “இனியும் இது பற்றி தனது தாயாரிடம் எதுவும் சொல்லாமல் போனால் தன்னுடைய வாழ்க்கை அவ்வளவு தான் என்றும், என்ன நடந்தாலும் தன் தயாரிடம் இது பற்றிக் கூறி விட வேண்டும்” என்றும், அந்த சிறுமி முடிவு செய்து உள்ளார்.

அதன்படி, அன்றைய தினம் வேலைக்குச் சென்று விட்டு இரவு வீடு திரும்பிய தன் தாயாரிடம், “உன் காதலனால் எனக்கு என்ன நடக்கிறது தெரியுமா?” என்று கூறியிருக்கிறார். இதனால், சந்தேகம் அடைந்த அவரது தாயார், “என்ன நடக்கிறது? என்ன நடந்தது?” என்று, கேட்டிருக்கிறார். அப்போது, தனக்கு நேர்ந்த பாலியல் பலாத்கார வன்முறைகள் பற்றியும், தன்னை வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அவன் இஷ்டம் போல் என்னை அவன் ஆட்டி படைக்கிறான்” என்று கூறி கதறி அழுதுள்ளார்.

இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், தனது கள்ளக் காதலிடம் இது பற்றிக் கேட்டுள்ளார். அப்போது, கள்ளக் காதலன் ஜாவித் சண்டை போட்டுள்ளார்.

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், ஜாவித்தை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அவன் சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி, அதை வீடியோ எடுத்தது தெரிய வந்தது. இதனையடுத்து, அவனது செல்போனை பறிமுதல் செய்த போலீசார், ஜாவித் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனையடுத்து, ஜாவித்தை சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.