தாயும் மகளும் காதலர்களோடு ஓடியதால், கணவன் தற்கொலை செய்துகொண்ட வழக்கில், “கள்ளக் காதல் விசயத்தில் நான் மாட்டிக்கொண்டதால், மகளின் காதலை காட்டிக்கொடுத்து நான் சமாளிக்க நினைத்த போது, என் கள்ளக் காதலை மகள் காட்டி கொடுத்துவிட்டாள்” என்று, கைதான மனைவி அதிர வைக்கும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

திருப்பூர் பொம்மன் நாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்த ரவி, ஒர்க் ஷாப் ஒன்றை நடத்தி வந்தார். ரவிக்கு, கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு கனகவல்லி உடன் திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த தம்பதிக்கு 17 வயதில் ஒரு மகளும், 15 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ரவி தனக்குச் சொந்தமாக ஒர்க் ஷாப்க்கு சென்ற பிறகு, அவரது மனைவி கனகவல்லி சொந்தமாக அழகு நிலையம் வைத்து நடத்தி வந்தார். 

அழகு நிலையத்தில் பணி இல்லாத நேரத்தில் டிக்டாக்கில் மூழ்கி உள்ளார் கனக வல்லி. இதனால், கனகவல்லியை டிக்டாக் என்னும் நோய் ஆட்கொண்டு 

விட்டது. அழகு நிலையத்தில் இருக்கும் போதும், டிக்டாக்கில் மூழ்கி இருந்த கனகவல்லி, வீட்டிற்குச் சென்ற பிறகும் டிக்டாக்கே கதி என்று கிடந்துள்ளார். 
தாயாரின் இந்த டிக்டாக் மோகம், பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டிலிருந்த அவரது மகள் 17 வயது சிறுமிக்கும் தொற்றி உள்ளது. இதனால், அவரும் டிக்டாக்கிலேயே மூழ்கிப் போனார். 

தாயாரும், மகளும் டிக்டாக்கில் மூழ்கிப்போன வேளையில், தாய் கனகவல்லி டிக்டாக் மூலமாகவே ஈரோட்டைச் சேர்ந்த ஒரு நபருடன் நெருக்கமாகப் பழகி வந்துள்ளார். இதனால், கள்ளக் காதல் அவர்களுக்குள் வளர்ந்து உள்ளது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாகத் தெரிகிறது.

அதே போல், அவரது மகளுக்கும் டிக்டாக் மூலம் ஈரோட்டைச் சேர்ந்த டிப்ளமோ படிக்கும் அருண்குமார் என்ற இளைஞனைக் காதலித்து வந்து உள்ளார். இதன் காரணமாக, தாயும் - மகளும், ஒரே வீட்டில் ஒரே ரூமில் அமர்ந்து தங்களது காதலை வளர்த்து வந்துள்ளனர். தாயின் காதல் விசயம் மகளுக்கும், மகளின் காதல் விசயம் தாயிக்கும் தெரிய வந்துள்ளது. 

இப்படி, மகள் காதலிலும் தாய் கள்ளக் காதலிலும் மூழ்கிக் கிடந்த நிலையில், இரவு பணி முடிந்து வீடு திரும்பிய ரவி, தாயும் மகளும் ஒரே ரூமில் தங்களது காதலர்களோடு செல்போனில் பேசிக்கொண்டு இருந்ததைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனையடுத்து, மனைவி மற்றும் தன் மகளையும் ரவி கண்டித்து உள்ளார். இதனால், ஆத்திரமடைந்த தாயும் - மகளும், ரவி உடன் சண்டைக்குச் சென்றுள்ளனர். அத்துடன், தாயும் மகளும், ரவியை வெறுத்து ஒதுக்கத் தொடங்கி உள்ளனர். இதனால், ரவியும் மனைவியையும் மகளையும் கண்டிக்க முடியாமல் இருந்துள்ளார். இதனையடுத்து, தாய் - மகள் காதல் முற்றிய நிலையில், தாய் - மகள் இருவருமே தங்களது காதலர்களோடு வீட்டை விட்டு ஓட்டம் பிடித்துள்ளனர். 

இதனால், அதிர்ச்சியடைந்த ரவி, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாகத் தாயையும், மகளையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்திய போலீசார், இருவரையும் ரவி உடன் அனுப்பி வைத்தனர். ஆனால், ரவி உடன் நில நாட்கள் இருந்து விட்டு, அதன் பின்னரும் தாயும் - மகளும் மீண்டும் தங்களது காதலர்களைத் தேடி ஓட்டம் பிடித்துள்ளனர். இதனால், அவமானம் அடைந்த ரவி, “எனது மகனைப் பார்த்துக்கொள்ளுமாறு” தனது சகோதரிகளுக்கு வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டு விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால், அவரது 15 வயது மகனின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியானது.

இந்த தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், காதலர்களோடு ஓட்டம் பிடித்த தாய் - மகளைத் தேடி வந்தனர். அத்துடன், அவர்களது இரு காதலர்களையும் போலீசார் தேடி வந்தனர். 

இந்நிலையில், திருப்பூரில் வைத்து நேற்று மாலை தாய் கனகவல்லி மற்றும் மகனின் காதலன் அருண்குமார் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனையடுத்து, “என்ன நடந்தது? ஏன் உங்கள் கணவர் தற்கொலை செய்துகொண்டார்? என்று போலீசார் விசாரித்துள்ளனர். அப்போது வாக்குமூலம் அளித்த மனைவி கனகவல்லி, “எனக்கு செல்போன் மூலமாக எடப்பாடியைச் சேர்ந்த விக்னேஷ் பழக்கம் ஆனார். அவருடன் நான் நெருக்கமாகப் பழகி வந்தேன். இந்த விசயம் என் மகளுக்குத் தெரிந்து விட்டதால், கணவரிடம் அதைச் சொல்லி விடுவாள் என்ற பயத்தில், என்னுடைய தவற்றை மறைப்பதற்காக நம் மகள் அருண்குமாரை காதலித்து வருவதாகச் சொல்லி கணவரிடம் சமாளித்தேன். ஆனாலும் எனது மகள் நான் விக்னேசுடன் நெருங்கிப் பழகும் விஷயத்தைச் சொல்லி, என்னைக் காட்டிக் கொடுத்துள்ளார்.

இதன் காரணமாக, எனக்கும் என் கணவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. இதனால், என் மகளிடம் 'நீ காதலித்து வரும் அருண்குமாரை உனக்குத் திருமணம் செய்து வைக்கிறேன். இங்கு இருந்தால் உனது அப்பா அருண்குமாரை கல்யாணம் செய்து வைக்க மாட்டார்' என்று, கூறி எனது மகளை ஏமாற்றி, வீட்டை விட்டு வெளியேற்றி ஈரோட்டிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால், என் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்து, எங்களை மீண்டும் கணவரோடு அனுப்பி வைத்தனர். அதன்படி சென்ற நாங்கள், அடுத்த சில நாட்களில் மீண்டும் எங்கள் காதலர்களைத் தேடி ஓடிவிடடோம். 

என் மகளை மகளிர் விடுதியில் சேர்த்து விட்டு, நான் மட்டும் கள்ளக் காதலன் விக்னேஷ் வீட்டிற்குச் சென்று 6 நாட்கள் தங்கினேன். அப்போது “நானும், என்  மகளும் இன்னொரு திருமணம் செய்து கொள்ளப் போவதாக” போனில் அவரிடம் கூறினேன். அப்போதே அவர் சாகப்போவதாகக் கூறினார். அதற்கு நான், 'நீ செத்தால் தான் சந்தோஷம்' என்று கூறிவிட்டேன். இதனால், தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்” என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கின் கீழ் கைது செய்த போலீசார், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், கனகவள்ளியின் மகளை மீட்ட போலீசார், அவரை திருப்பூர் கோல்டன்நகரில் உள்ள அவருடைய பாட்டியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டது.