திருப்பத்தூர் அருகே மனைவியின் கள்ளக் காதலனை, கணவன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரை அடுத்த தேவலாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் - அபிராமி தம்பதியினர் வசித்து வருகின்றனர். 

இதனிடையே, மணிகண்டனர் வேலைக்குச் சென்ற பிறகு, அவர் மனைவி அபிராமி, அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் அறிமுகமாகி உள்ளார்.

இந்த அறிமுகம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக் காதலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, கள்ளக் காதலர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த தகவல் எப்படியோ, அபிராமியின் கணவன் மணிகண்டனுக்கு தெரிய வந்தது. இதனால் கடும் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், ராஜேஷிடம் அடிக்கடி பிரச்சனை செய்துள்ளார். இதனால், அவர்கள் இருவரும் பார்க்கும் இடமெல்லாம் சண்டை போட்டுக்கொண்டே வந்துள்ளனர்.

மேலும், இந்த கள்ளக் காதல் தொடர்பாக, வீட்டில் மணிகண்டன் - அபிராமி தம்பதியினர் இடையே பிரச்சனை எழுந்துள்ளது. இதனால், கடும் கோபமடைந்த கணவன் மணிகண்டன், நேராகக் கள்ளக் காதலன் ராஜேஷ் வீட்டிற்குச் சென்று, அவர் மீது பெட்ரோலை ஊற்றி விட்டு, கண் இமைக்கும் நேரத்தில் தீ வைத்து உள்ளார். இதில், தீ பற்றி எரிந்த நிலையில், அவர் உயிர் பயத்தில் இங்கும் அங்கமாக ஓடி, அலறித் துடித்துள்ளார்.

ராஜேஷின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் வருவதற்குள் மணிகண்டன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் ராஜேஷே மீட்டு, அருகில் உள்ள ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு அவருக்கு முதல் உதவிகள் அளிக்கப்பட்டன. அத்துடன், ராஜேஷ் உடலானது கிட்டத்தட்ட 90 சதவீதம் தீக்காயங்கள் ஏற்பட்ட நிலையில், உயிர் சிகிச்சைக்காக அவர் வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு, அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து, விரைந்து வந்த போலீசா்ர, தீக்காயம் ஏற்பட்ட ராஜேஷிடம் வாக்கு மூலம் பெற்றனர். அதன் அடிப்படையில் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த உமராபாத் காவல் துறையினர், தீ வைத்து எரித்த மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையில், இந்த கள்ளக் காதல் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. 

இதனிடையே, மனைவியின் கள்ளக் காதல் விசயம் தெரிந்தும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான கணவன், கள்ளக் காதலனை பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.