இளம் பெண்ணை ஆபாசப் படம் எடுத்த கொடூர கும்பல், அந்த பெண்ணின் கணவருக்கே அந்த வீடியோவை அனுப்பிய சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் முக்கூடல் பகுதியைச் சேர்ந்த சாலமோன் என்ற இளைஞருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த பழக்கம், நாளடைவில் அவர்களுக்குள் காதலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, அவர்கள் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. 

அப்படி, காதலியுடன் மிகவும் நெருக்கமாக இருந்ததை, காதலிக்குத் தெரியாமலேயே காதலன் சாலமோன் வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது.

அதன் தொடர்ச்சியாக, காதலியை ஆபாசமாக படம் எடுத்ததைக் காட்டி, அந்த பெண்ணை மிரட்டி பல முறை பணம் கேட்டு பெற்று வந்தார்.

இதனால், அந்த பெண் எப்போதும் பயத்துடனே காணப்பட்டு வந்தார். அத்துடன், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் வீட்டில் யாருடன் பேசாமல் இருந்து வந்தார். இளம் பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகம் வரவே, பெண்ணின் பெற்றோர் நைசாக பேசி என்ன நடந்தது என்று தன் மகளிடம் விசயத்தை கரந்து உள்ளனர்.

அதன்படி, அந்த பெண்ணும் தனது காதலன் பற்றியும், அவனிடம் உள்ள ஆபாசப் படங்கள் பற்றியும், அந்த படத்தை வைத்து தொடர்ந்து பல முறை மிரட்டி பணம் பறித்து வந்ததையும் கூறி கதறி அழுதுள்ளார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் பெற்றோர், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணிற்கு அந்த பகுதியில் உள்ள வேற ஒரு இளைஞனுக்கு திருமணம் செய்து வைத்தனர். 

இதனால், இன்னும் ஆத்திரமடைந்த சாலமோன், தொடர்ந்து அந்த பெண்ணிற்கு தொலைபேசி மூலமாகத் தொந்தரவு கொடுத்துக்கொண்டே வந்து உள்ளார். அத்துடன், அந்த பெண்ணிடம் பணம் கேட்டும் அவர் தொந்தரவு செய்து வந்தார். 

குறிப்பாக, அந்த ஆபாசப் படத்தை காட்டி, “என்னிடமும், எனது நண்பர்களிடமும் நீ நெருக்கமாக இருக்க வேண்டும்” என்றும், அவர் கட்டாயப்படுத்தி நிர்ப்பந்தித்து வந்துள்ளார். ஆனால், இதற்கு அந்த பெண் தொடர்ந்து மறுத்து வந்ததுடன், மீண்டும் பயந்து போனார்.

அப்போது, கடும் கோபம் அடைந்த சாலமோன், கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் கணவர் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு வீட்டிற்கே நேரடியாகச் சென்று மிரட்டியதோடு, அந்த பெண் அணிந்திருந்த தங்க நகைகள், அந்த பெண் வைத்திருந்த பணம் ஆகியவற்றையும் அவன் பறித்துக்கொண்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், இன்னும் பயந்து போன அந்த பெண், தனது பெற்றோருக்கு போன் செய்து விசயத்தைக் கூறி அழுதுள்ளார். இதனால், கடும் அதிர்ச்சியடைந்த பெண்ணின் குடும்பத்தினர், அங்குள்ள ஆலங்குளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், அவர்கள் நடவடிக்கை ஏதும் எடுக்க வில்லை என கூறப்படுகிறது. 

இதனையடுத்து, சேரன்மாதேவி மாவட்ட உதவி கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தனர். அதன் படி, வழக்குப் பதிவு செய்யப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், சாலமோன் மற்றும் அவரது நண்பர்கள் மனோ, ஜான்சன் ஆகிய 3 பேர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்ததோடு, சாலமோனை கைது செய்தனர். அத்துடன், இந்த வழக்கில் தொடர்புடைய மனோ தலைமறைவாகி உள்ளதால், அவரை போலீசார் தேடி வருகின்றனர். 

குறிப்பாக, இந்த வழக்கில் தொடர்புடைய ஜான்சன், ஏற்கனவே ஒரு பெண்ணை பாலியல் ரீதியாக மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இதனிடையே, இளம் பெண்ணை காதல் என்ற பெயரில் நெருங்கிப் பழகி விட்டு, பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதோடு மிரட்டியே பணம் பறித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.