அண்ணி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டிய கொழுந்தன் ஒரு பக்கம் மிரட்டிய நிலையில், மற்றொரு பக்கம் கணவன் வேண்டுமென்றால் 8 லட்சம் ரூபாய் வேண்டும் என்று மாமியார் டீல் பேசிய நிலையில், ஒட்டு மொத்த குடும்பமும் அவருக்கு ஷாக் கொடுத்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு தற்போது 35 வயது ஆகும் நிலையில், அந்த பெண்ணுக்கு அதே மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு நபருடன் 2006 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு தற்போது 12 வயது ஆகிறது.

திருமணத்திற்குப் பிறகு, கணவன் - மனைவி இருவருமே சென்னையில் பைனான்ஸ் மற்றும் கட்டடம் கட்டித் தரும் ஒப்பந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.

அந்த நேரம் பார்த்து, மகனின் பள்ளி ஆசிரியையுடன், கணவருக்கு கள்ளக் காதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் மனைவிக்குத் தெரிய வர, கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், கணவரிடம் சண்டை போட்டுள்ளார். இதனையடுத்து, இவருக்கும் அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், கணவனிடமிருந்து விவாகரத்து பெற்று, தன் மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

ஆனாலுமே, அந்த பெண் தனது கணவருடன் தொழில் ரீதியான தொடர்பில் மட்டுமே இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. 

கணவனை விட்டுப் பிரிந்த அடுத்த சில மாதங்களில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பாளையம் சந்திரபாடியம் பகுதியில் கட்டுமான பணியினை மேற்கொண்டனர். அப்போது, சீனிவாச ரெட்டி என்பவருடன், அந்த பெண்ணின் கணவருக்கு அறிமுகம் ஆகி நட்பு ஏற்பட்டு உள்ளது. 

சீனிவாச ரெட்டிக்கு கணவன் - மனைவி இருவரும் பிரிந்து வாழும் விவரங்கள் மற்றும் குடும்ப பிரச்சனைகள் அனைத்தும் தெரிந்துகொண்டு இருவரையும் சேர்த்து வைப்பதாக்க அந்த கணவருடன் கூறிய நிலையில், அந்தப் பெண்ணிடம் நட்பாகப் பழகத் தொடங்கி உள்ளார். ஆனால், கணவருடனான தன் மகனின் ஆசிரியை அப்போது வரை நீடித்து வந்ததால், கணவருடன் சேர்ந்து வாழ, அவரது மனைவி மறுத்துவிட்டார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்ட சீனிவாச ரெட்டி, “நானும் என் மனைவியை விவகாரத்து செய்து தனியாகத் தான் வாழ்ந்து வருகிறேன். அந்த வலியும் வேதனையும் எனக்கும் நன்றாகத் தெரியும்” என்று ஆறுதலான வார்த்தைகளை வீசி, அந்த பெண்ணை வலைத்துப்போட்டுள்ளார். 

மேலும், “நீங்கள் விருப்பப்பட்டால், நான் உங்களைத் திருமணம் செய்ய விரும்புவதாக” அந்த பெண்ணிடம் அவர் கூறி உள்ளார். அதற்கு, அந்த பெண்ணும்  சம்மதம் கூறியுள்ளார். இதனால், அவர்கள் இருவரும் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 

ஆனால், அந்த திருமணத்திற்கு சீனிவாச ரெட்டியின் பெற்றோர் வரதட்சணையாக 90 சவரன் நகை கேட்டுள்ளனர். அதன்படியும், அந்த பெண்ணின் தரப்பில் இருந்து 90 சவரன் நகை போட்டு திருமணம் செய்து வைத்துள்ளனர். 

திருமணத்திற்குப் பறிகு, அந்த பெண்ணும் புதிய கணவர் சீனிவாச ரெட்டியும் சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தனர். அப்போது, அரிசி வியாபாரத்திற்குப் பணம் வேண்டும் என சிறுக சிறுக அப்பெண்ணிடம் இருந்து சுமார் 14 லட்சம் ரூபாய் கணவர் சீனிவாச ரெட்டி வாங்கியுள்ளார். 

இதனையடுத்து, அந்த பெண் கருவுற்றார். ஆனால், தனக்கு இப்போது குழந்தை வேண்டாம் என்று பல காரணங்களைக் கூறி சீனிவாச ரெட்டி அதனைக் கலைக்கும்படி செய்துள்ளார். 

இப்படியாக அவர்கள் வாழ்ந்து வந்த நிலையில், கடந்த 2 மாதங்களாக சீனிவாச ரெட்டி மனைவியுடன் வீட்டில் தங்காமல் வெளியூரிலேயே இருந்து வந்து உள்ளார்.

இதனால், சந்தேகமடைந்த அந்த பெண் அவரைப் பற்றி வெளியே விசாரிக்கத் தொடங்கி உள்ளார். அப்போது, அந்த பெண்ணுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியான செய்தி கிடைத்தது.

அதாவது, சீனிவாச ரெட்டிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி உள்ள நிலையில், அவர் தன் முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா, உடன் பிறந்த சகோதரர் கிஷோர் ஆகியோருடன் சென்னை மாதவரத்தில் குடும்பமாக வசித்து வந்தது தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், சீனிவாச ரெட்டியுடன் சண்டை போட்டுள்ளார். 

பதிலுக்கு சீனிவாச ரெட்டியும் சண்டைபோடத் திருமணத்தின் போது  வரதட்சணையாகக் கொடுத்த 90 சவரன் நகையைத் திரும்பக் கேட்டுள்ளார். இதனையடுத்து, சீனிவாச ரெட்டி தலைமறைவாகினார். 

சீனிவாச ரெட்டியை பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதனால், சீனிவாச ரெட்டியின் தாயார் சந்திரகலா அந்த பெண்ணை சமாதான பேச்சு வார்த்தை நடத்த தன் வீட்டிற்கு அழைத்து உள்ளார். அந்த பெண்ணும் அதை நம்பி சென்றுள்ளார். 

அப்போது டீல் பேசிய சீனிவாச ரெட்டியின் தாயார் சந்திரகலா, “சீனிவாசனின் முதல் மனைவி பத்மாவதி விலக வேண்டுமானால், நீ 8 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும்” என்று, கூறி உள்ளார். அந்த பெண்ணும், “கணவர் தனக்கு வேண்டும்” என்று, தன்னிடம் இருந்த 6 லட்சம் ரூபாயை மாமியாரிடம் கொடுத்து உள்ளார். அதன் தொடர்ச்சியாக, அவர் அதே வீட்டில் தங்கி உள்ளார்.

அப்போது, அந்த வீட்டில் அந்த பெண் குளிக்கும் போது கணவர் சீனிவாச ரெட்டியின் தம்பி கிஷோர் மறைந்திருந்து, வீடியோ எடுத்து அந்த பெண்ணின் வாட்ஸ்ஆப்பிற்கு ஸ்க்ரீன் ஷாட் மட்டும் அனுப்பி வைத்துள்ளார். அத்துடன், இந்த குளிக்கும் வீடியோவை வெளியிடாமல் இருக்க பல லட்சம் ரூபாய் பணம் மற்றும் நகைகள் வேண்டும் என்று, கேட்டு கிஷோர் மிரட்டத் தொடங்கி உள்ளார்.

இதனால், கடும் அதிர்ச்சியும் பீதியும் அடைந்த அந்த பெண், பெண்கள் பாதுகாப்பு காவல் துணை ஆணையர் ஜெயலட்சுமியிடம் புகார் அளித்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த சென்னை மாதவரம் போலீசார், ஆபாச வீடியோ எடுத்து மிரட்டிய கிஷோரை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, 2 வது கணவர் சீனிவாச ரெட்டி மீது பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வந்தது. 

அதாவது “திருப்பதி, நெல்லுார், உதயகிரி, ஓங்கோல், விஞ்சமூர் ஆகிய காவல் நிலையங்களில் பாலியல் தொழில், பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருந்து வருவது” தெரிய வந்தது.

மேலும், “இந்த மாதவரம் காவல் நிலையத்திலேயே, சீனிவாச ரெட்டியின் தந்தையைக் கொலை செய்ய முயன்ற வழக்கில், சீனிவாசன் அவரது மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா, தம்பி கிஷோர் ஆகிய ஒட்டு மொத்த குடும்பமும் கைதாகி தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதும் தெரிய வந்தது. இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண், தான் ஏமாற்றப்பட்டதை அந்த பெண் நன்கு உணர்ந்துள்ளார். 

எனினும், சீனிவாச ரெட்டி, அவரது முதல் மனைவி பத்மாவதி, தாய் சந்திரகலா ஆகியோர் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில், அவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதனால், மாதவரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.