சிறுமியை ஆபாசப் படம் பார்க்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்த 3 சிறுவர்கள்!

ஆன்லைன் வகுப்பிற்காகப் பெற்றோர் வாங்கி தந்த ஸ்மார்ட்போனில் 11 வயது சிறுமியை ஆபாசப் படம் பார்க்க வைத்து, 3 சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த கொடுமை கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

Three youths sexually assault school girl

பிள்ளைகளுக்குத் தேவையானது வாங்கித் தருவது மட்டும் பெற்றோரின் கடமை அல்ல. அவர்கள் என்ன செய்கிறார்கள், அவர்களது பழக்கம் வழக்கம் என்ன? அவர்களது மனநிலை எப்படியிருக்கிறது போன்றவற்றையும் அறிந்து, அதற்கேற்ப அவர்களைச் சாதனையாளர்களாக மாற்றி நல்வழிப் படுத்துவதே பெற்றோரின் இன்றியமையாத கடமையாகும். பெற்றோரின் இந்த பொறுப்புடைமை தவறும்போது, அவர்களது வழி எப்படித் திசைமாறிச் செல்கிறது என்பதற்கு இந்த செய்தியே சாட்சி சொல்கிறது.

கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த தாயை இழந்த 11 வயது சிறுமி, தந்தை மற்றும் அத்தையின் பாதுகாப்பில் வளர்ந்து வந்தார். சிறுமியின் தந்தை மற்றும் அத்தை இருவரும் அந்த பகுதியில் தினக் கூலி வேலைக்கு செல்று வருவது வழக்கம். 

தற்போது கொரோனா காலம் என்பதாலும், தன் வீட்டில் டிவி எல்லை என்பதாலும் தந்தை மற்றும் அத்தை வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருக்கும் சிறுமி, கீழ் வீட்டில் உள்ள அவுஸ் ஓனர் வீட்டில் டி.வி. பார்ப்பது வழக்கம். 

அந்த அந்த அவுஸ் ஓனர் வீட்டில், 10 ஆம் வகுப்பு படிக்கும் சிறுவன் ஒருவன் இருந்துள்ளான். அத்துடன், அந்த பெற்றோரும் வேலைக்குச் செல்லும் நிலையில், அந்த சிறுவன் மட்டும் வீட்டில் இருப்பது வழக்கம்.

Three youths sexually assault school girl

இதனிடையே, இந்த கொரோனா காலத்தில் பல தனியார் பள்ளிகள் தங்களது மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு எடுத்து வருகிறது. சிறுவனின் பெற்றோர் ஆன்லைன் வகுப்பிற்காக ஸ்மார்ட்போன் வாங்கி தந்துள்ளனர்.

ஆன் லைன் வகுப்பிற்காக வாங்கி கொடுக்கப்பட்ட செல்போனை, ஆபாசப் படம் பார்ப்பதற்காக அந்த சிறுவன் பயன்படுத்தியதோடு மட்டுமல்லாது, தனது நண்பர்களுடன் ஆபாசப் படங்களை பார்த்து ரசித்து வந்துள்ளான். 

ஒரு கட்டத்தில், ஆபாச போதை தலைக்கேறிய நிலையில், தனது வீட்டில் வாடகைக்கு இருக்கும் சிறுமியைக் குறிவைத்த அந்த சிறுவர்கள், அந்த சிறுமியையும் கட்டாயப்படுத்தி ஆபாசப் படம் பார்க்க வைத்துள்ளனர். பின்னர், அந்த சிறுமியை அந்த 10 ஆம் வகுப்பு சிறுவனும், அவனுடைய நண்பனும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அத்துடன், 3 வதாக வேறொரு நண்பனையும் வரவழைத்த அந்த சிறுவர்கள், 3 பேருமாகச் சேர்ந்து அந்த சிறுமியை மாறி மாறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

Three youths sexually assault school girl

பாலியல் பலாத்காரம் செய்ததோடு, “இதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது” என்று அந்த சிறுமியை 3 பேரும் சேர்ந்த கடுமையாக மிரட்டி உள்ளனர்.

சிறுவர்களின் காம போதையில் பலியாக்கப்பட்ட அந்த சிறுமிக்கு, அடுத்த சில நாட்களில் திடீரென வயிற்று வலி உள்ளிட்ட உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

அப்போது, சிறுமியின் தந்தை மற்றும் அவரது அத்தை சிறுமியிடம் விசாரித்த போது, சிறுவர்கள் அத்துமீறி பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.

இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள், அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசார், 2 சிறுவர்களைக் கைது செய்து சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர். மேலும், தலைமறைவாக இருக்கும் மற்றொரு மாணவரைத் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

இதனிடையே, ஆன்லைன் வகுப்பிற்காய் வாங்கப்பட்ட செல்போனில் 3 சிறுவர்கள் காமபோதைக்கு அடிமையாகி, ஒரு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம், பெற்றோர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.