2 மாதத்தில் திருமணம் நடைபெற இருந்த நிலையில், செல்பி மோகத்தில் காதல் ஜோடி கிணற்றில் விழுந்ததில், பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் நவஜீவன் நகரை 24 வயதான அப்பு, மற்றும் அவரது உறவினரான பட்டாபிராம் காந்தி நகரைச் சேர்ந்த ஸ்டெஃபி என்கின்ற மெர்சிக்கும், வரும் ஜனவரி மாதம் திருமணம் செய்ய இரு வீட்டுப் பெரியோர்களால் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

Bride died after selfie

இதனையடுத்து, இருவரும் ஜோடியாக பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்தனர். சம்பவத்தன்று, முத்தா புதுப்பேட்டை அருகே காண்டிகை கிராமத்தில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகில் அமர்ந்து இருவரும் பேசிக்கொண்டிருக்கையில், காதல் ஜோடிகள் இருவரும் சேர்ந்து செல்பி எடுக்க முயன்றுள்ளனர்.

அப்போது, எதிர்பாராத விதமாகக் கால் தவறி, மெர்சி கிணற்றுக்குள் விழுந்துள்ளார். இதனால், சட்டென்று திகைத்து நின்ற அப்பு, மெர்சியை பிடிக்க முயன்றுள்ளார். அப்போது, அவரும் நிலைதடுமாறி  கிணற்றில் விழுந்துள்ளார். 

Bride died after selfie

இதனையடுத்து, இருவரின் அலறல் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் விவசாயம் செய்துகொண்டிருந்த சடகோபன் என்பவர் ஓடிவந்து, அப்புவை காப்பாற்றி உள்ளார். மேலும், மெர்சியை காப்பாற்றுவதற்குள், அவர் தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.