4 வது மனைவியின் 11 வயது மகளிடம் தந்தையே பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வட மாநிலங்களில் நடைபெறும் இது போன்ற பாலியல் குற்றங்கள் இந்த முறை, தமிழ்நாட்டில் தான் அதுவும் திருப்பத்தூர் மாவட்டத்தில் தான் அரங்கேறி இருக்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதான சரவணன் (பெயர் மாற்றப்பட்டு உள்ளது), வசித்து வருகிறார்.

47 வயதான இந்த சரவணன், வாணியம்பாடி பகுதியில் பைனான்ஸ் மற்றும் ரியல் ஸ்டேட் தொழில் செய்தி வருகிறார். இந்த தொழிலில் நல்ல வருமானம் பார்த்து வந்தார் என்றும் கூறப்படுகிறது. அதுதான், தவறு செய்ய அவருக்கு கண்ணை மறைத்து உள்ளது போலும்?!

சரவணனுக்கு ஏற்கனவே திருமணம் ஆன நிலையில், தனது மனைவியுடன் வசித்து வந்தார். இதன் காரணமாக, அவருக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் பிறந்தனர். இதனையடுத்து, அவரது மனைவி இறந்து போனார்.

முதல் மனைவி இறந்ததால், சரவணன் 2 வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். இதனால், 2 வது மனைவிக்கு 2 பெண் பிள்ளைகள் பிறந்தனர்.  
ஒரு கட்டத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, 2 வது மனைவி, இவரை விட்டு பிரிந்து சென்றார். 

இதனையடுத்து, சரவணன் அதைப் பற்றி துளியும் கவலைப்படாமல் 3 வதுாக ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் 
உள்ளனர். 

இந்த நிலையில் தான், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் விசயமாகச் சென்னையில் இருந்த போது, அங்கே 2 பெண் குழந்தைகளின் தாயுடன் அறிமுகம் ஏற்பட்டது.

அந்த பெண், தற்போது தனது கணவனை விட்டுப் பிரிந்து சரவணனை முறைப்படி திருமணம் செய்யாமல் அவருடன் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், அந்த 4 மனைவி தனது இரு பெண் பிள்ளைகளுடன் இரவு நேரத்தில் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தார்.

அப்போது, 4 வது மனையின் பெண் பிள்ளைகள் மீது சபலப்பட்ட சரவணன், வீட்டில் நன்றாகத் தூங்கிக்கொண்டிருந்த 4 வது மனைவியின் 11 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, அவரிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த 11 வயது சிறுமி, இது பற்றி தனது அம்மாவிடம் கூறி அழுதிருக்கிறார். இதனைக் கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த அவரது 4 வது மனைவி, அங்குள்ள வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அவரது தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். இது தொடர்பான விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. இச்சம்பவம், அப்பகுதியில் கடும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.