பனிரெண்டு நாட்கள் நடைபெறும் மதுரை சித்திரை திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரையின் அடையாளமாக விளங்கும் சித்திரை திருவிழா கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக கோவில் உள் வளாகத்திலேயே பக்தர்கள் இன்றி நடத்தப்பட்டது. மேலும் கடந்த வருடம் இந்த திருவிழா எளிமையாக நடந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக மதுரையில் சித்திரை திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மதுரை சித்திரை திருவிழா அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இதில் உலக பிரசித்தி பெற்ற வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 16-ம் தேதி நடைபெறுகிறது.

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பௌர்ணமியை முன்னிட்டு திருவிழா கோலாகலமாக 10 முதல் 15 நாட்கள் நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்த ஆண்டு 12 நாட்கள் இத்திருவிழா நடைபெற உள்ளது. சித்திரை திங்களில் அந்த இந்திரனே இத்திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவதாக வரலாற்று குறிப்புகள் சொல்கின்றன. இன்று மதுரையில் காலை 10 மணிக்கு இத்திருவிழா தொடங்கியது. குறிப்பாக காலை 10.35 மணி முதல் 10.56 மணிக்குள் மிதுன லக்கினத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. 

மேலும் தற்போது கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அனைவரும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கோவில் நிர்வாகம் சார்பில் சித்திரை திருவிழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்தது. இந்நிலையில் 12 நாட்கள் நடைபெறும் இந்த உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா இன்று  கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

இதனைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் மீனாட்சி சுந்தரேசுவரர் சுவாமிகள் காலை, இரவு என இருவேளையும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வருவர்.

விழாவில் வருகிற 12-ம் தேதி முக்கிய நிகழ்ச்சியாக மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம், 13-ம் தேதி திக்கு விஜயமும் நடைபெறுகிறது.  இரண்டு ஆண்டுகள் கழித்து பக்தர்களுக்கு அனுமதி வழங்கி உள்ளதால் ஏரளாமான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இத்திருவிழாவைக் காண அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார். மேலும் இத்திருவிழாவிற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது. இத்திருவிழாவினை பல செய்தி ஊடகங்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.