வழிப்பறி நகைக் கொள்ளையில் ஈடுபட்டு துப்பாக்கியுடன் பதுங்கி இருந்த கொள்ளையன் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் அருகே தான் இந்த என்கவுன்டர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்து உள்ள பென்னலூர் பகுதியை சேர்ந்தவர் 54 வயதான இந்திரா என்ற பெண், நேற்று பென்னலூர் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்து உள்ளார்.

அப்போது, அந்த வழியாக வந்த 2 வட மாநில இளைஞர்கள், அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு ஓட முயன்றனர். 

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த அந்த பெண் இந்திரா, சத்தம் போட்டு கூச்சலிட்டு உள்ளார்.

இதனையடுத்த, பெண்ணின் அலறல் சத்தம் பேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடி வந்து வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க முயன்றனர். 

அப்போது, வழிப்பறி கொள்ளையர்களில் ஒருவன் திடீரென்று தான் மறைத்து வைத்து இருந்த துப்பாக்கியை காட்டி பொது மக்களை மிரட்டி உள்ளான்.

இதனால், கடும் அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் சற்று பின் வாங்கி உள்ளனர். இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட வழிப்பறி கொள்ளையர்கள், கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்று பென்னலூர் ஏரி அருகே காட்டுக்குள் ஓடி மறைந்து கொண்டதாக தெரிகிறது.

இதனையடுத்து, உடனடியாக அந்த பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். 

அத்துடன், காட்டுக்குள் பதுங்கிய கொள்ளையர்களை பிடிப்பதற்காக 10 தனிப்படை அமைக்கப்பட்டது. அந்த 10 தனிப்படை போலீசாரும், கொள்ளையர்களை வலைவீசி மிகத் தீவிரமாக தேடி வந்தனர்.

அந்த நேரத்தில், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடும் போது அவர்கள் கையில் இருந்த துப்பாக்கியில் இருந்து தோட்டாக்கள் கீழே விழுந்து உள்ளது. இதனை கைப்பற்றிய போலீசார், கொள்ளையர்கள் பதுங்கிய இடம் அடர்ந்த மரம், செடி கொடிகள் கொண்ட அடர்ந்த காட்டுப்பகுதி என்பதால், தனிப்படை போலீசார் தேடுவதில் சிரமம் ஏற்பட்டது. 

இதையடுத்து, போலீசார் டிரோன் கேமரா மூலமாக கொள்ளையர்களை இன்னும் தீவிரமாக தேடி வந்தனர்.  

இந்த நிலையில் தான்,துப்பாக்கியுடன் பதுங்கியிருந்த கொள்ளையர்களில் ஒருவனை போலீசார் அதிரடியாக என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்று உள்ளனர். 

மேலும், கொள்ளையனை போலீசார் இன்னுமு் தீவிரமாக தேடி வருகின்றனர். 

என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையன், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த முர்கஷா என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

இரண்டாவது கொள்ளையர் நைதீம் என்பவரை போலீசார் தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு,  தற்போது அதிரடியாக கைது செய்துள்ளனர். 

இதனிடையே, துப்பாக்கியுடன் ஏரியில் பதுங்கிய கொள்ளையர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Encounter