“ஓ சொல்றியா மாமா” பாடல் ஆண்களை பாலியல் ரீதியாக விமர்சிக்கப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி தற்போது பார்க்கலாம்..

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது “புஷ்பா” படம். 

தெலுங்கில் பிரபலமான இயக்குனரான சுகுமார் இயக்கத்தில் வெளி வரும் இந்த படத்தில், நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திரார். இந்த படம், இந்தியாவின் 5 மொழிகளிலும் வெளிவருகிறது.

மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு, தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கும் நிலையில், இந்த படத்தில் இடம் பெற்ற ஒரு ஐட்டம் சாங்கிற்கு, நடிகை சமந்தா மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடி அனைவரையும் கிரங்கடித்து உள்ளார்.

இந்த பாடலை தமிழில் கவிஞர் விவேகா எழுத, இவரின் வரிகளுக்கு நடிகை ஆண்ட்ரியா, தனது ஹஸ்கி வாயிஸ்ல் பாடி ஒட்டுமொத்த பேரையும் கிரங்கடிக்க, இவற்றுடன் நடிகை சமந்தாவின் கவர்ச்சி நடனமும், இந்த பாடலை மேலும் குளு குளுனு repeat modeல கேட்க தூண்டியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

இந்த பாடல் இந்தியா முழுக்க எந்த அளவுக்கு பிரபலம் ஆனதோ, அந்த அளவுக்கு தற்போது சர்ச்சையிலும் சிக்கி இருக்கிறது.

அதாவது, “ஓ சொல்றியா மாமா” பாடல், ஆண்களுக்கு எதிராக இருப்பதாக முதலில் ஆந்திரா ஆண்கள் சங்கத்தினர் நேற்று முன் தினம் வழக்கு தொடர்ந்தனர்.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் தமிழ்நாடு ஆண்கள் சங்கத்தினரும், இப்பாடலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். 

அப்படி, எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த பாடலில் அப்படி என்னதான் பிரச்சனை இருக்கிற என்று பார்த்தால், இந்த பாடல் “பெண்கள் மீதான ஆண்களின் சபல புத்தியை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது” என்பதே உண்மை.

அதாவது, “ஓ சொல்றியா மாமா.. ஓஓ சொல்றியா மாமா” என்பதே, இந்த பாடலின் ஃபேமஸ் வரிகளாக இடம் பிடித்து உள்ளன.

“சேலை, ப்ளவுஸ், சின்ன கவுன் டிரெஸ்ஸில் ஒன்னும் இல்லைங்க.. ஆசை வந்தா சுத்தி சுத்தி அலையும் அலையும் ஆம்பளை புத்தி” என்ற வரிகளும், “ஒழுக்க சீலன, ஒசந்த மனுஷன் வெளிய போடும் வேஷம்ங்க, விளக்கை அணைச்சா போதும்.. எல்லாம் வெளக்கை மாறும் ஒண்ணுதாங்க” என்று ஆண்களை சற்று தூக்கலாக விமர்சிக்கும் வகையில் இந்த பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளன.

குறிப்பாக, “ஒரு பெண் எந்த விதத்தில் எப்படி ஆடை அணிந்திருந்தாலும் என்ன நிறம், உயரம், தோற்றமாக இருந்தாலும், எப்படி பேசினாலும் ஆண்களின் புத்தி வக்கிரம் நிறைந்த ஒன்றாக இருப்பதாகவே, இந்த பாடல் பொருள் தருவதாக அமைந்திருக்கிறது.

மிக முக்கியமாக, இந்த பாடலின் கடைசியாக இடம் பெற்ற வரியான “விளக்கை அணைச்சா போதும்.. எல்லாம் வெளக்கை மாறும் ஒண்ணுதாங்க” என்கிற வரிகள் தான், இந்த பாடலின் ஒட்டு மொத்த எதிர்ப்புக்கு காரணமாக இருக்கிறது.

இதனால், அனைத்து ஆண்களையும் இந்த பாடல் வரிகள் தவறாக சித்தரிப்பதாகவும், இந்த பாடலை தடை செய்ய வேண்டும்” என்றும் குறிப்பிட்ட ஆண்கள் சங்கத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும், கடும் எதிர்ப்பு தெரிவித்தும் வருகின்றனர்.

இந்த பாடலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஆண்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள மறந்துவிட்டார்கள்.

இதற்கு முன்பு வந்த எல்லா பாடல்களுமே பெண்களின் உருவத்தையும், கேரக்டரையும், அவர்களது செயல்களையும் தவறாகவும், தப்பு தப்பாவும் சித்தரித்து, வச்சு செய்வது போல் “ஐட்டம் சாங்” என்னும் பெயரில் ஆண்களை குளு குளுனு கேட்க வைத்து.. பெரும்பாலன ஆண்கள் கொண்டாடி மகிழும் போது எந்த பெண்ணும் பெரிதாக எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை.

ஆனால், “காலப்போக்கில் அதே மாதிரியான ஒரு “ஐட்டம் சாங்” ஆண்களின் சபல புத்தியை வெளிச்சம் போட்டு காட்டும் போது, இதனை ஆண்கள் கூட்டமே repeat modeல கேட்கும் போது, பெண்கள் ரசிக்க கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பதில் என்ன நியாம் இருக்கிறது?”

“இதே சினிமா பாடல்கள் மூலம், ஒரு பெண்ணை அணு அணுவாக ரசித்த இந்த ஆண்கள் கூட்டம், இதையும் கேட்டு தங்களை தாங்களே மாற்றிக்கொள்வதிலும், திருத்திக்கொள்வதிலும் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. மாறாக, இதற்கு எதிர்ப்பு என்று ஆண்கள் சங்கங்கள் களத்தில் குதித்தால், பிற்காலத்தில் வரும் எல்லா குத்து பாடல்களுக்கும் பெண்களும், இனி போராட்ட களத்தில் குதிக்கும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை. இதே நிலை தொடர்ந்தால், தமிழ் சினிமாவில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிலேயே “ஐட்டம் சாங்” என்ற ஒன்று இல்லாமலே போய்விடும் என்றே சொல்லத் தோன்றுகிறது.

சினிமாவில் “ஐட்டம் சாங்” இல்லை என்றால், இனி பசங்க மட்டும் இல்ல, பொண்ணுங்களும் அப்பறம் தம் அடிக்க போயிருவாங்க என்ற எதிர்நோக்கு பார்வையில், “O solriya mama... Oo solriya mama..” என்ற பாடலுக்கு, “எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் ஆண்கள் சங்கம் அமைதியாக இருப்பதே எல்லோருக்கும் நல்லது” என்று, பெரும்பாலன ஆண்கள் விருப்படுகிறார்கள்.