தஞ்சாவூரில் மனைவியின் முதல் கணவருக்குப் பிறந்த 9 வயது சிறுமியை, 2 வது கணவன் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் சாந்தி (பெயர் மாற்றப்பட்டு உள்ளது) என்பவருக்கு, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு பெண் குழந்தை பிறந்து உள்ளது.

அதன் தொடர்ச்சியாகக் கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, அந்த பெண் கணவனிடமிருந்து முறைப்படி விவகாரத்து பெற்று, தன் குழந்தை உடன் தனியாக வந்து வசித்து வந்தார்.

அதன் பிறகு, கடந்த 2017 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த மென்பொறியாளர் வில்லிங் கிறிஸ்டோபர் என்பவரை 2 வதாக திருமணம் செய்து கொண்டார்.

திருமணத்திற்கு பிறகு, தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் பகுதியில் அந்த தம்பதியினர் மகிழ்ச்சியாகவே வசித்து வந்தனர். இந்த 2 வது கணவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், சாந்தியின் முதல் கணவருக்குப் பிறந்த குழந்தைக்கு தற்போது 9 வயது நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சாந்தியும் அவரது மகனும் கடைக்குச் சென்றிருந்தனர்.

அப்போது வீட்டில் இருந்த அந்த 9 வயது சிறுமி, தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில், தன் மகள் மீது சபலப்பட்ட அந்த 2 வது கணவர் வில்லிங் கிறிஸ்டோபர், அந்த 9 வயது சிறுமியை தன்னுடைய படுக்கை அறைக்கு இழுத்துச் சென்று, பலவந்தமாக பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார். 

இதில், பாதிக்கப்பட்ட சிறுமி தனது தயார் வரும் வரை அழுதுகொண்டே இருந்துள்ளார். தயார் வீடு திரும்பியதும், பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தனது தாயிடம் அழுதுகொண்டே தனக்குத் தந்தையால் நேர்ந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து கூறி கதறி அழுதுள்ளார்.
 
இதனால், கடும் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், கணவன் மீது வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் மென்பொறியாளரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதே போல், சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள மாரமங்கலம் ஊராட்சி கருப்பனம்பட்டி பகுதியைச் சேர்ந்த கோவிந்தசாமி - சாந்தா தம்பதியின் 17 வயது மகள், அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வந்தார்.

அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதான வெங்கடேஷ் என்ற இளைஞர், சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாகப் பல ஆசை வார்த்தைகள் கூறி கடந்த வாரம் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், மகள் மாயமானதால் பதறிப்போன சிறுமியின் பெற்றோர்கள், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த இளைஞரைக் கைது செய்து, கடத்திச் செல்லப்பட்ட சிறுமியை மீட்டனர். 

மேலும், சிறுமிக்கு மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிறுமியைக் கடத்திச் சென்ற வெங்கடேஷை போலீசார், போக்சோ சட்டத்தின் கீழ் சேலம் மத்தியச் சிறையில் அடைத்தனர்.