தஞ்சாவூர் அருகே ராகுல் மற்றும் பக்கத்து கிராமமான கோனுாரைச் சேர்ந்த லட்சுமணன், இருவரும் நண்பர்கள். சில தினங்களுக்கு முன்பு லட்சுமணன் வீட்டில் இருந்த 30 ஆயிரம் ரூபாயைக் காணவில்லை, அந்தப் பணத்தை ராகுல் தான் எடுத்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் பேரில், லட்சுமணனும் அவரது மற்ற நண்பர்களும் ராகுலை விசாரித்துள்ளனர்.


காணமல் சென்ற  பணத்தை  தான், எடுக்கவில்லை என்று ராகுல் கூறியும், அதை  நம்பாத லட்சுமணன்,  ராகுலின் கண்களைத் துண்டால் கட்டிவிட்டு, இரு கைகளையும் இரண்டு பேர் பிடித்து மரத்தோடு ஒட்டி நிற்க வைத்து, ஒரு கம்பால் ராகுலின் பின்புறத்தில் கடுமையாகத் தாக்கியுள்ளார். வலியில் கதறியபடி ராகுல் கெஞ்சியும், தாக்குதலை நிறுத்தவில்லை. ஒரு கட்டத்தில் வலியால் மயங்கி விழுந்த பிறகு ராகுல ,  லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் விட்டு சென்றுள்ளார். 


ராகுலை தாங்கிய காட்சிகளை லட்சுமணனின் நண்பர்களே வீடியோவாகப் பதிவு செய்து,  அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். இதை அறிந்த ராகுல், செய்யாத தவறுக்கு,  திருட்டுப் பட்டம் கட்டி , அடித்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டதால் அவமானத்தில் எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.


உடனடியாக ராகுலை மீட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதன்பின்பு, ராகுலின் தந்தை கொடுத்த புகாரின் பேரில், லட்சுமணன் மற்றும் அவரது நண்பர்கள் மீது கொலை முயற்சி மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.