கல்வி என்பது எப்படி சிந்திக்க வேண்டும் என்பதை கற்றுத் தருவதாகவும், நம்மை சிந்திக்க வைப்பதாகவும் இருக்க வேண்டும் என்பதையே உன்னத நோக்கமாக கொண்டு 1994 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதுதான் பொன்னியம்மன் கல்வி அறக்கட்டளை. கல்வியின் மூலம் மாணவர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்பட இக்கல்வி அறக்கட்டளை தங்கவேலு பொறியியல் கல்லூரி நிறுவி, கல்வி மட்டுமின்றி சீரிய ஒழுக்கத்தையும் மாணவர் சமுதாயத்திற்கு புகட்டி வருகிறது.

Thangavelu College

கல்வியின் மூலம் சமுதாயத்தின் எல்லா தேவைகளையும் தாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்ற நோக்கோடு டி.ஜெ.கல்வி அறக்கட்டளை 2000ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இந்த கல்வி அறக்கட்டளை டி.ஜெ.பொறியியல் கல்லூரி, Davinci School of Design and Architecture (டாவின்சி கட்டிட வடிவமைப்பு கல்லூரி, Chennai College of Arts and Science(சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி) ஆகியவற்றை நிறுவி மாணவர் சமுதாயத்தினரிடையே பொறுப்புணர்வையும் சமுதாய முன்னேற்றத்தில் அதனின் பங்கையும் சீரிய கல்வி மூலம் உணர்த்தி வருகிறது.

கடின உழைப்பு, ஒழுக்கம், படிப்பை கற்றுத்தருவதில் நேர்மை ஆகியவற்றில் மேன்மைப்பட்டுள்ள இக்கல்லூரிகள் மாணவ மாணவிகளின் அறிவையும், ஆற்றலையும் கூர்மைப்படுத்துவதோடு அவர்களின் கற்பனை வளம் கொண்டவர்களாகவும் திறமை உடையவர்களாகவும் உருவாக்குவதையே பிரதான இலட்சியமாக கொண்டுள்ளன.

இந்த கல்லூரிகள் அனைத்தும் அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இளநிலை பி.இ.கோர்ஸ்களில், CSE, EEE, ECE, EIE, IT, Mechanical, Civil, B.Arch மற்றும் முதுநிலை கோர்ஸ்களில் MBA, MCA, ME: CAD, PED, CSE, ED, PSE, CS, AE ஆகிய பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

Thangavelu college course

சென்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்ற கல்லூரி சென்னை  பல்கலைக்கழகத்துடன் இணைக்கப் பட்டுள்ளது. இளநிலை  B.Com – General , B.Com – Accounting&Finance, B.Com – Computer Application, B.Sc- Computer Science, BBA ஆகிய பாடப் பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

சென்னை இராஜீவ்காந்தி சாலையில் அமைந்துள்ள இக்கல்லூரிகள் எல்லா உள்கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளதால் தொழிற்கல்வி,கட்டிடக்கலை,கலை மற்றும் அறிவியல், வர்த்தகம், மேலாண்மை, சார்ந்த கல்வி பயில ஏற்ற இடமாக அமைந்துள்ளது.

இக்கல்லூரிகளில் வகுப்பறைகளும், ஆய்வகங்களும் அரசு விதிகளி்ன்படி கட்டிடங்கள் அமைந்துள்ளது.


ஆராய்ச்சி மாணவர்கள் உபயோகப்படுத்தும் அளவிற்கு மிகச் சிறந்த புத்தகங்களை கொண்ட நூலகமும், இணையதளத்தின் மூலம் இந்தியா மற்றும் உலகம் முழுவதும் உள்ள நூலகங்களை இணைக்கும் டெல்நெட் வசதி உள்ளது.

தகுதி மற்றும் அனுபவமிக்க பேராசிரியர்கள், இணை பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் மாணவர்கள் 90 முதல் 100 சதவிகித தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்து வருகின்றனர்.

ஆய்வக வசதி, இணைய தள வசதியுடன் கூடிய கணினி நிலையம், தொழில் முனைவோருக்கான மையம், தொழில் நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றும் மையம், தேசிய மற்றும் சர்வதேச கம்பெனிகளுடன் புரிந்துணர்வு தொழில்நுட்ப கலைஞர்கள், நிர்வாகிகள், தொழில்முறை ஆலோசகர்களுடன் கலந்து பேசிடும் வாய்ப்பு என்று அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் மற்றும் அண்ணா பல்கலைக்கழக விதிமுறைகளை கடைபிடிப்பதோடு மாணவரின் முழுமையான கல்விக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்தந்த துறையைச் சார்ந்த படிப்புகளுக்கு அது தொடர்புடைய தொழிற்கூடங்களை பார்வையிடுதல் மற்றும் தொழிற்சாலைகளில் நேரடி பயிற்சி போன்ற வசதிகள் செய்து தரப்படுகின்றன. இது தவிர தேசிய மாணவர் படை, தொழில்நுட்ப கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகள், மாணவர்கள் கலை, கலாச்சார திறன்களை  வெளிப்படுத்தும் போட்டிகள் ஆகியவையும் உண்டு.

மாணவ மாணவிகளுக்கு தனித்தனியான விடுதிகள் அனைத்து வசதிகளையும் கொண்ட உணவகம் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ளது.

சென்னையையும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலிருந்து மாணவர்கள் கல்லூரிக்கு வந்து செல்ல கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை முறை அகில இந்திய தொழில்நுட்பக் கழகம், மாநில அரசு, அண்ணா மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்யப்படுகின்றது.

இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் பட்டம் பெற்று உலகம் முழுவதும் பல்வேறு முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியும், பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயின்றும் வருகின்றனர்.

ஒவ்வொரு துறையிலும் மாணவ மாணவியர்களின் முன்னேற்றம் மற்றும் வேலை வாய்ப்பிற்கான அத்தனை சிறப்பு பயிற்சிகளும் அளிக்கப்படுவதால் இக்கல்லூரிகளில் படிக்கும் அனைவருமே பணியிட வாய்ப்பினை பெற்று விடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டில் (2020) 92% மாணவ மாணவிகள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். எஞ்சியோர் உயர் கல்வி பயில்கின்றனர்.

தங்கவேலு பொறியியல் கல்லூரியும், டி.ஜெ.பொறியியல் கல்லூரியும் அகில இந்திய தொழில்நுட்பக் கழகத்தால் (AICTE)  அங்கீகரிக்கப்பட்டுள்ளது. Davinci School of Design and Architecture இந்திய கட்டிடக்கலை கழகத்தால் (COA) அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

Thangavelu college detail

 

Thangavelu college detail

 

 
College Address

Thangavelu Engineering College

Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)

Karapakkam,Chennai - 600 097

Tamil Nadu, India

Phone: 044 - 2952 1952 / 98411 14834

Email: admin@thangavelu.edu.in

Admission Helpline: 98411 1483489398 75566

For Admission: admission@thangavelu.edu.in

Office Address

Administrative Office

Ponniamman Educational and Charitable Trust

24, 6th Main Road, Kasturibai Nagar

Adyar, Chennai - 600 020

Tamil Nadu, India

Phone: 044 - 2491 12822491 1334

Fax: 044 - 2491 1255