மனைவிக்கு உதவியாக இருக்கட்டும் என யோசித்து, ஆசிரியர் ஒருவர் முன்னாள் மாணவியை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரியில் உள்ள வில்லியனூர் பகுதியில் தான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வில்லியனூர் பகுதியில் உள்ள தகடிப்பட்டு கலிதீர்தாள் குப்பம் பகுதியைச் சேர்ந்த 42 வயதான செந்தில்குமார், அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒப்பந்த ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு ஏற்கனவே மகேஸ்வரி என்ற பெண்ணுடன் கடந்த 2006 ஆம் ஆண்டு, இரு வீட்டார் முறைப்படி காதல் திருமணம் நடந்து உள்ளது.

அத்துடன், திருமணத்தின் போது மகேஸ்வரி வீட்டில் இருந்து 25 பவுன் தங்க நகைகள் வரதட்சணை கொடுத்திருக்கிறார்கள்.  

ஆனால், திருமணத்திற்குப் பிறகு, செந்தில்குமார் 50 பவுன் நகை கூடுதலாக கேட்டு, மனைவி மகேஸ்வரியை கொடுமைப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த வரதட்சணை கொடுமையின் உச்சக்கட்டமாக, “கூடுதல் வரதட்சணை தரவில்லை என்றால், எங்கள் மகனுக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து வைத்துவிடுவோம்” என்றும், செந்தில் குமாரின் பெற்றோரும் மிரட்டியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான், கடந்த 2018 ஆம் ஆண்டு செந்தில் குமார் - மகேஸ்வரி தம்பதிக்கு, ஒரு ஆண் குழந்தையும் பிறந்திருக்கிறது. 

குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து இந்த குழந்தையை பராமரிப்பதற்காகவும், தனது மனைவியை பார்த்துக்கொள்வதற்காகவும், தன்னிடம் படித்த முன்னாள் மனைவியை அழைத்து வந்து, தனது வீட்டில் அவர் வேலைக்கு பணியமர்த்தி இருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, அந்த முன்னாள் மாணவியுடன், ஆசிரியர் செந்தில் குமாருக்கு கள்ளக் காதல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், அவர்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. 

கணவனின் இந்த விசயம், மனைவி மகேஸ்வரிக்கு தெரிய வந்த நிலையில், கடும் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, அந்த பெண்ணை “வேலைக்கு வர வேண்டாம்” என்று, சொல்லி இருக்கிறார்.   

இந்த சூழலில் தான், கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆசிரியர் செந்தில் குமார், திடீரென்று தனது வீட்டில் இருந்து மாயமாகி உள்ளார்.

அதன் பிறகு அவர் திரும்பி வரவே இல்லை. இது தொடர்பாக மனைவி மகேஸஸ்வரி விசாரித்து உள்ளார்.

அப்போது, “தனது வீட்டை விட்டு வேலைக்கு வர வேண்டாம் என்று சொல்லி அனுப்பிய அந்த இளம் பெண்ணுடன், கணவன் செந்தில் குமார் ரகசிய திருமணம் செய்து கொண்டு இருப்பது” அவருக்குத் தெரிய வந்தது.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, இது குறித்து தனது தனது மாமனார் -  மாமியாரிடம் கேட்ட உள்ளார். ஆனால், அவர்கள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. 

இதனால், இன்னும் அதிர்ச்சியடைந்த மகேஸ்வரி, அங்குள்ள வில்லியனூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.

இந்தப் புகார் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், செந்தில்குமார் மற்றும் அவரது தந்தை நாராயணன்,  தாய் மற்றும் அண்ணன் ஞானசுந்தரம் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே, பள்ளி ஆசிரியர் ஒருவர் தனது மனைவிக்குத் தெரியாமல் தன்னுடன் படித்த முன்னாள் மாணவியை ரகசியமாக திருமணம் செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.