இந்தியாவில் அதிக கொலைகள் நடைபெறும் பட்டியலில் தமிழ்நாடு 6வது இடம் பிடித்துள்ளது.

இந்தியா முழுவதும் நடைபெறும் குற்றச் சம்பவங்கள் தொடர்பாக, தேசிய குற்ற ஆவணக் காப்பகம், 2017 ஆம் ஆண்டிற்கான புள்ளி விபரங்களை வெளியிட்டுள்ளது. அதில், பல்வேறு அதிர்ச்சிக்குரிய பட்டியல் இடம் பெற்றுள்ளன.

Tamil Nadu is sixth most dangerous

அதன்படி, இந்தியாவில் உள்ள மொத்தம் 29 மாநிலங்களில் அதிக கொலைகள் நடைபெற்ற மாநிலத்தின் பட்டியலில், தமிழ்நாடு 6 வது இடம் பெற்றுள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் 1613 கொலைகள் நடைபெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்தியாவின் முக்கியமான 19 மாநகரப் பட்டியலில் அதிக கொலைகள் நடைபெற்ற மாநகரமாகச் சென்னை 4 வது இடம் பெற்றுள்ளது. அதன்படி, சென்னை மாநகரில் மட்டும் 162 கொலைகள் நடைபெற்றுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அத்துடன், SSLC Crimes தொடர்பான குற்றச் செயல்கள்
அதிகம் நடைபெற்ற மாநில பட்டியலிலும், தமிழ்நாடு 4 வது இடம் பிடித்துள்ளது.

சட்ட விரோதமாகக் கூட்டம், போராட்டம் எனக் கூடியதாகப் போடப்பட்ட வழக்குகளில் தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது. அதேபோல், பட்டியல் மற்றும் பழங்குடியினர் கொலைகள் அதிகம் நடைபெற்ற மாநிலங்களில், தமிழ்நாடு 4 வது இடம் பெற்றுள்ளது.

பெண் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் பலாத்கார வழக்குகள் அதிகம் நடைபெறும் மாநிலப்பட்டியலில் தமிழ்நாடு 8 வது இடம் பிடித்துள்ளது.

Tamil Nadu is sixth most dangerous

குறிப்பாக, 2018 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் 1488 கொலைகளும், 2017 ஆம் ஆண்டு 1613 கொலைகளும், 2016 ஆம் ஆண்டு 1511 கொலைகளும் நடைபெற்றுள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது. இந்த 3 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் 4612 கொலைகள் நடந்திருப்பது இதன் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.