WaterOnClick.com என்ற நிறுவனம் இப்படித்தான் உருவானது.

தகவல் தொழில்நுட்பத்துறையில், பல முன்னணி நிறுவனங்களில் முக்கியமான பொறுப்புகளில் பதினைந்துக்கு மேற்பட்ட வருடங்களாக வேலை செய்துவிட்டு, தங்களுக்குகென்று ஒரு தொழில் சாம்ராஜ்யத்தை நிறுவ வேண்டுமென்ற கனவுகளோடு இருந்த இருவர், வேலையை விட்டு வந்து என்ன மாதிரியான தொழிலை ஆரம்பித்திருப்பார்கள்? வீடு மற்றும் அலுவலகங்களுக்கு குடி தண்ணீர் டெலிவரி செய்யும் தொழிலை ஆரம்பித்தால் எப்படி இருக்கும்? ஆச்சர்யமாக இருக்கிறதா?
 
சதீஸ்குமார் மற்றும் கார்த்திகேயன் இருவரும் தங்களது கல்லூரிப் படிப்பை கோயம்புத்தூரில் முடித்துவிட்டு, career-ன் துவக்க காலத்தில், சென்னையில் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த நண்பர்கள். தகவல் தொழில்நுட்பம் சார்ந்ததாக அவர்களது வேலை அமைந்தாலும், அவர்களுக்கு என்று ஒரு தொழில்  நிறுவனம் அமைக்க வேண்டும் என்ற கனவு இருவருக்கும் எப்போதுமே இருந்து வந்தது. தொடர்ந்து பல ஆண்டுகள் ஒரே நிறுவனத்தில் வேலை செய்த இருவரும், பிறகு வெவ்வேறு முன்னணி நிறுவனங்களில் வேலை செய்வதற்காக வெவ்வேறு திசைகளில் சென்றனர். பல வருடங்கள் கழித்து அவர்கள் தங்களது கனவை நனவாக்கும் பாதையில் செல்ல முடிவெடுத்து, ஒரு கட்டத்தில் இருவருமே வேலையை விட்டு விட்டு மீண்டும் இணைந்த போது, இந்த நிறுவனத்திற்கான விதை விழுந்தது.
 
மக்களுக்குத் தவிர்க்கவே முடியாத அத்தியாவசியமான ஒன்று உண்டென்றால் - அது தவிக்கிற வாய்க்குத் தேவைப்படும் தண்ணீர்.
 
பெரிய நிறுவனங்கள் மற்றும் மேல்தட்டு மக்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்த, ஒரு சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்களால் மட்டும் பாட்டில் செய்யப்பட்டு விநியோகிக்கப்பட்ட தண்ணீர், அது எல்லோரும் பயன்படுத்தும் பொருளாக ஆனபின், பலவேறு சிறு நிறுவனங்கள் தண்ணீர் சுத்திகரிப்புத் தொழிலில் கால் பதித்தார்கள். முதலில் பெரு நகரங்களில் மட்டுமே புழக்கத்தில் இருந்த தண்ணீர் கேன்கள், இன்று சிறு நகரங்கள் கிராமங்கள் வரை உபயோகப்படுத்தும் ஒன்றாக உள்ளது. அந்தந்தப் பகுதிகளில் உள்ள தனி மனிதர்கள், சிறு மற்றும் மளிகைக் கடைகள் விநியோகம் செய்பவர்களாக ஆனார்கள்.
 
சதீஸ்குமார் மற்றும் கார்த்திகேயன், ஒரு நுகர்வோராக இதில் பல்வேறு குறைபாடுகள் சிரமங்கள் இருப்பதை உணர்ந்தார்கள். ஒரு நுகர்வோராக, ஒருவர் அவருக்குத் தேவையான பிடித்த தண்ணீர் brand-யை அவரால் வாங்க முடியமா? முடியாது. அந்தந்த பகுதிகளில் அவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ அதை மட்டுமே வாங்க முடியும்.
 
வீட்டில் சிறு குழந்தைகள் முதல் வயதான பெரியவர்கள் வரை அனைவரும் குடிக்கும், சுத்திகரிக்கப்பட்ட தரமான நல்ல குடிநீர் என்பதாலேயே அதிக விலை கொடுத்து வாங்கும் தண்ணீர், உண்மையாகவே தரமானதாக உள்ளதா? அதை அந்தந்த பகுதிகளில் stock செய்து வினியோகம் செய்பவர்கள், கேன்களின் சுத்தம், தண்ணீரின் சுத்தம் பற்றிக் கவலைப்படுகிறார்களா? இல்லை. குழாய் தண்ணீரை கேன்களில் அடைத்து விற்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அப்படித்தான் வீட்டுக்கும் வந்து சேர்க்கப்படுகின்றன.
 
நுகர்வோருக்கு தண்ணீர் ஆர்டர் செய்வதில், பணம் செலுத்துவதில் என்னென்ன வசதிகள் உள்ளன? நவீன தொழில் நுட்பங்களை அதில் பயன்படுத்த முடியமா?
 
இவ்வாறாக உள்ள பல்வேறு குறைபாடுகளை நிவர்த்தி செய்ய முடியுமா என்பதை இருவரும் கேள்விக்கு உள்ளாக்கினார்கள். அதை எப்படி சரி செய்யலாம் என்று சிந்தித்ததில், அங்கு ஒரு வியாபார வாய்ப்பு இருப்பதை அறிந்து கொண்டார்கள்.
 
அதே சமயத்தில், அதில் உள்ள சவால்களும் அவர்கள் கண்களுக்குத் தெரியாமல் இல்லை. இதில் வெற்றி உடனே கிடைத்துவிடும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்கள் அதுகாறும் வேலை செய்த நிறுவனங்களில் அவர்களுக்குக் கிடைத்த வசதிகள் கிடைக்காது என்பது தெரியாமல் இல்லை. அவர்கள் சந்திக்கப்போகும் மனிதர்கள் - நுகர்வோர்கள், உடன் வேலை செய்பவர்கள், vendors, drivers, delivery boys என அனைவரும், இதுவரை அவர்கள் செய்த வேலையில் சந்தித்த மனிதர்களை போல இல்லை என்பதை உணராமல் இல்லை.
 
செல்ல வேண்டிய தூரம் அதிகம் என்பதும் அவர்களுக்கு நன்றாகவே தெரிந்தது. அந்த உழைப்பைக் கொடுப்பதற்கான மன உறுதியும், நீண்ட காலம் உழைக்கும் பொறுமையும் அவர்களுக்கு இருப்பதை உறுதி செய்துகொண்டார்கள்.
 
ஒரு நுகர்வோருடைய தேவைக்கும், அது அவருக்குக் கிடைப்பதற்கும் உள்ள அந்த இடைவெளிகளை நிரப்பி, நல்ல customer experience கொடுத்தால், பெரிய அளவில் இதைச் செய்யும் போது, இந்தத் தொழிலை ஒரு நீண்ட கால நோக்கில் மிகவும் வெற்றிகரமாக கட்டமைக்க முடியும் என்று இருவரும் உறுதியாக நம்பினார்கள்.
 
அவர்கள் முதலில் செய்தது - WaterOnClick.com என்ற ஒரு வலைத்தளத்தை நிறுவியது. அடுத்து சில முக்கியமான தண்ணீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று அவர்களின் தரம் போன்றவற்றை ஆய்வு செய்து அவர்கள் deal செய்யப்போகும் ஒரு list of brands-யை தேர்வு செய்தார்கள். 

சென்னை வேளச்சேரியில் ஒரு சிறிய இடத்தில் ஒரு டெலிவரி வேனை வைத்து, WaterOnClick.com delivery operation-யை 2013 December மாதம் தொடங்கினார்கள். இன்று, சென்னையின் பெரும்பாலான இடங்களுக்கும், தமிழ்நாட்டின் பிற முக்கிய நகரங்களிலும், புதுச்சேரியிலும் சேவையை விரித்து தமிழகத்தின் No.1 முன்னணி தண்ணீர் (Packaged Drinking Water) விநியோகம் செய்யும் நிறுவனமாக உள்ளது. பல vendor மற்றும் brand-களை சேர்த்துள்ளார்கள். இவர்களின் சொந்த brand-ஆன SAKRO-வும் இதில் அடங்கும். தரம் சரியில்லை என்றால் தயங்காமல் அந்த brand-யை நிறுத்தி விடுகிறார்கள். 

வலைத்தளத்துடன் மட்டும் ஆரம்பித்தது - இன்று, மொபைல் ஆப் (Mobile App) மற்றும் வாடிக்கையாளர் சேவை மையம் (Customer Call Center) ஆகிய வசதிகளுடன் நல்ல சேவையை செய்து வருகிறார்கள்.

Online Payment Options - டெபிட், கிரெடிட், நெட் பேங்கிங், யுபிஐ, பேடிஎம், கூகுள் பே உள்ளிட்ட செயலிகள் மூலமாக ஆர்டருக்கான தொகையை செலுத்தலாம்.

WaterOnClick.com நிறுவனத்தின் மூலம் தண்ணீர் ஆர்டர் செய்வதால் கிடைக்கும் பலன்கள்:

1) பல்வேறு முன்னணி brand-களின் தண்ணீர் பாட்டில், கேன்களை நீங்கள் ஆர்டர் செய்துகொள்ளலாம். அனைத்து விலையிலும் தண்ணீர் உள்ளன. தண்ணீர் பாட்டில்கள் 300 ml ரூ.5 மற்றும் 1 litre ரூ.10 மட்டுமே.
2) ஒவ்வொரு முறை தண்ணீர் கேன், பாட்டில் ஆர்டர் செய்யும்போதும் 100% உத்தரவாதத்துடன் கூடிய கூப்பன்கள் (Discount Coupons) வழங்கப்படும், அதை வைத்து வலைத்தளத்தில் மற்ற பொருட்களை வாங்கும்போது தள்ளுபடி அளிக்கப்படும்.
3) ஒவ்வொரு முறை நீங்கள் தண்ணீர் வாங்கும்போதும் Reward Point-கள் அளிக்கப்படும். அதற்கு தகுந்த மதிப்பீட்டில், நீங்கள் பின்னர் வீட்டு உபயோக பொருட்கள் அல்லது அந்த மதிப்பீட்டில் மறுபடியும் தண்ணீர் பாட்டில், கேன்களை வாங்கிக்கொள்ளலாம்.
4) உங்கள் நண்பர்கள், உறவினர்களை WaterOnClick.com-க்கு அறிமுகம் செய்து போனஸ் (Refer & Earn) பெற்றுக்கொள்ளலாம்.
5) இதர நுகர்வோர் பொருட்களை Free Samples என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் டெலிவரி தொகை மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.

இப்படி 100+ brand-கள், 200+ vendor-கள், சென்னை உள்பட 16 நகரங்களில் WaterOnClick.com சேவை பரந்து விரிந்து கிடைக்கிறது. மேலும் விபரங்களுக்கு வாடிக்கையாளர் சேவை மையத்தை (044-40047777, 9600123000) தொடர்பு கொள்ளவும்.

வலைத்தளத்தில் (Website) தண்ணீர் ஆர்டர் செய்ய: www.WaterOnClick.com
மொபைல் ஆப் (Mobile App) பதிவிறக்கம் செய்ய: https://play.google.com/store/apps/details?id=com.wateronclicknew.carevigil