“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நடந்த உண்மையை ஏன் அதிமுக மறைக்குறாங்க?” என்று, ஓ.பன்னீர்செல்வத்திற்கு திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

கடந்த 2016 ஆம் ஆண்டில் அதிமுக ஆட்சியில் இருந்த போது, தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் உச்சத்தில் இருந்தது. இதனால், ஒட்டு மொத்த தமிழ்நாடே இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டு போராட்டத்தை வெற்றிப்பெற வைத்தது.

இந்த நிலையில் தான், தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் வரிந்து கட்டிக்கொண்டு நேற்று மாலை வரை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது.

இந்த நிலையில் தான், ல் நடைபெறுவதையொட்டி, “ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து விஷமப் பிரச்சாரம் செய்வதா? என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் முதலமைச்சரை பார்த்து கேள்வி எழுப்பி சட்டமன்றத்தில் தான் பேசியதையே மறைக்க முயற்சிப்பது வேதனையளிக்கிறது” என்று, அமைச்சர்  ஐ.பெரியசாமி கேவலைத் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக பேசிய அமைச்சர்  ஐ.பெரியசாமி, “ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு முதலில் ஆதரவு தெரிவித்தார் என்றும், அதிமுக ஆட்சி முடிவு எடுப்பதற்கு முன்பே களத்திற்கு வந்தவர் மு.க.ஸ்டாலின்” என்று, குறிப்பிட்டார். 

அத்துடன், “மெரினா போராட்டமாக இருந்தாலும், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போராட்டம் என்றாலும், அன்று போராடிய இளைஞர்களோடு தோளோடு தோள் கொடுத்து நின்றவர் மு.க.ஸ்டாலின் என்றும், அதிமுக அரசு ஜல்லிக்கட்டுக்காகப் போராடிய இளைஞர்கள் அதுவும் அறவழியில் போராடிய இளைஞர்கள் மீது கண்ணீர் புகை குண்டு வீசியதும் உண்மை” என்றும், பகிரங்கமாக குற்றம்சாட்டினார். 

குறிப்பாக, “ஜல்லிக்கட்டு போராட்ட களத்தில் நின்றவர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதும் உண்மை” என்றும், அவர் சுட்டிக்காட்டினார். 

"மீனவர்களின் கடைகளை சென்னை நடுக்குப்பத்தில் அடித்து உடைத்ததும் உண்மை என்றும், அவ்வளவு ஏன் போலீசாரை விட்டு டயர்களை கொளுத்தி விட்டு, ஜல்லிக்கட்டு போராட்டத்தில் களத்தில் நின்ற இளைஞர்கள் மீது பழி போட முயற்சி செய்ததும் உண்மை” என்றும், அமைச்சர்  ஐ.பெரியசாமி பகிரங்கமாக குற்றம்சாட்டினார்.

“இதில் எது பொய் என ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை” என்றும், ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.

முக்கயமாக, இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குப் பணிந்து மத்திய பாஜக அரசு, ஓபிஎஸ் முதலமைச்சராக இருந்த அதிமுக அரசும் தமிழ்நாட்டு இளைஞர்களின் உணர்வுகளை இனியும் எதிர்க்க முடியாது என்ற தெரிந்த பிறகு தான், அவர்கள் ஜல்லிக்கட்டுக்குச் சட்டம் இயற்ற ஒப்புக் கொண்டனர்” என்றும், சுட்டிக்காட்டினார். 

“ஆனால், துவக்கம் முதலே போராடிய இளைஞர்கள் பக்கம் நின்று, சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டு மசோதாவை ஆதரித்து ஒருமனதாக நிறைவேற்றிக் கொடுத்தவர்தான் மு.க.ஸ்டாலின்” என்றும், ஐ.பெரியசாமி பேசினார்.

மேலும், “சட்டமன்றத்தில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மீது எவ்வளவு அவதூறுகளை வீச முடியுமோ, எத்தகைய அபாண்டமான குற்றச்சாட்டுகளைச் சுமத்த முடியுமோ அத்தனையையும் செய்து விட்டு, இன்று ஒன்றும் தெரியாதது போல் அறிக்கை விடுவதும், உண்மையைச் சுட்டிக்காட்டி உரையாற்றிய மு.க. ஸ்டாலின் அவர்களைக் கண்டனம் செய்வது தான் அரசியல் நாகரிகமா?” என்றும், ஐ.பெரியசாமி கேள்விக்கு மேல் கேள்வி எழுப்பி உள்ளார்.